இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனின் மலையாள எண்ட்ரி! அடுத்த அப்டேட் ரெடி!
மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிக்கும் ஒரு படத்தை கெளதம் கடந்த சில ஆண்டுகளாக இயக்கி வருகிறார். இந்த படத்தின் அப்டேட் குறித்த தகவலை இன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கௌதம் வாசுதேவ் மேனன் 2001 ஆம் ஆண்டு முதல் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரது முதல் படமான மின்னலே திரைப்படம் எதிர்பாராத அளவில் பெரும் வெற்றி அடைந்தது. அதனைத் தொடர்ந்து ஹிந்தியிலும் அதே படத்தை இயக்கி இருந்தார். அதன் பின் ”காக்க காக்க”, ”வேட்டையாடு விளையாடு”, ”பச்சைக்கிளி முத்துச்சரம்”, வாரணம் ஆயிரம் என தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்து கொண்டிருந்தார். கடந்த 2022 நடிகர் சிம்பு நடித்த வெந்து தனிந்தது காடு படத்தையும் எடுத்து முடித்து இருந்தார். பல காலமாக இவர் இயக்கி வைத்திருந்த துருவ நட்சத்திரம் படம் தற்போது வரை வெளியாகவில்லை. மேலும் இந்த ஆண்டு இவரது ஜோஷுவா இமை போல் காக்க என்ற படமும் வெளியானது.
கடந்த சில ஆண்டுகளாவே இவரது படங்கள் எதுவும் சரியாக செல்ல வில்லை. இதன் காரணமாக பல படங்களில் நடித்து வந்தார். படங்களில் நடித்து வந்ததை பல ரசிகர்கள் கலாய்த்தும் வந்தனர். குறிப்பாக ஒரு கலந்துரையாடலில் இயக்குனர் தங்கர் பச்சானும் கெளதம் வாசுதேவ் மேனனை கிண்டல் அடித்து பேசியிருந்தார். இவரது இயக்கத்தில் மீண்டும் இறங்கி அவரது பாணியில் ஒரு படம் வெளிவர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய உள்ளார் கெளதம்.
மலையாள சூப்பர் ஸ்டார்
1971 ஆம் ஆண்டு முதல் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாலத்திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக நடிகர் மம்மூட்டி இருந்து வருகிறார். வயது 73 யைக் கடந்த பின்னும் 30 வயது இளைஞருக்கு உரித்தான மிடுக்குடன், சுறு சுறுப்புடனும் பணியாற்றி வருகிறார் மம்மூட்டி. மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் தளபதி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம், மறுமலர்ச்சி மற்றும் பேரன்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இவரது அனைத்து கதாபாத்திரங்களும் உயிரோட்டத்துடன் நடித்து இருப்பார். மேலும் தமிழிலும் இவருக்கு பல ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இவர் இறுதியாக தமிழில் நடித்த பேரன்பு படத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
மலையாளத்தில் முதல் முறை
தமிழில் தன்னை முன்னணி இயக்குநராக தடம் பதித்த கெளதம் தற்போது மலையாளத்தில் முதல் படத்தை இயக்க உள்ளார். மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிக்கும் ஒரு படத்தை கெளதம் கடந்த சில ஆண்டுகளாக இயக்கி வருகிறார். இந்த படத்தின் அப்டேட் குறித்த தகவலை அவரே இன்று வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “மிகவும் தாழ்மையான மற்றும் உண்மையான அனுபவத்திற்கு நன்றி மம்முக்கா..
திரையரங்குகளுக்கான பயணத்தின் ஆரம்பம் இங்கே. #DominicAndTheLadiesPurse டீசர் இரவு 7 மணி முதல்வெளியாக உள்ளது. எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். இயக்குநராக தனது இரண்டாவது இன்னிங்ஸில் கெளதம் ஒரு ரவுண்ட் வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

டாபிக்ஸ்