Director Elan on Star Movie: ‘அப்பாவுக்கு சமர்பிக்கிறேன்; அந்த சர்ப்ரைஸ மட்டும் வெளியே சொல்லாதீங்க’- ‘ஸ்டார்’ இயக்குநர்!
Director Elan on Star Movie: ‘இந்தப்படத்தை என்னுடைய அப்பாவான ஸ்டில்ஸ் பாண்டியனுக்கு சமர்பிக்கிறேன். உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்’ - இயக்குநர் இளன்!
இயக்குநர் இளன் இயக்கத்தில், நடிகர் கவின் நடிப்பில், நாளை ஸ்டார் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இளன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் எமோஷனலான பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து இயக்குநர் இளன் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “ ஸ்டார் நாளை முதல்... இந்தப்படத்தை என்னுடைய அப்பாவான ஸ்டில்ஸ் பாண்டியனுக்கு சமர்பிக்கிறேன். உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்.
படம் பார்த்து முடித்த உடன், படத்தில் இருக்கும் 3 சர்ப்ரைஸ்களை நீங்கள் வெளியே சொல்ல வேண்டாம். அனைவரும் நீங்கள் பெற்ற நல்ல அனுபவத்தை பெற வேண்டும் என, எனக்குள் இருக்கும் கலைஞன் விரும்புகிறான்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
முன்னதாக, ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டிற்கு இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் இளன். இவர் போட்டோகிராபரும், நடிகருமான ஸ்டில்ஸ் பாண்டியனின் மகன் ஆவார்.
யுவன் ஷங்கர் ராஜா இசை:
இவர் அடுத்ததாக இயக்கி இருக்கும் திரைப்படம் ‘ஸ்டார். கவின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இளனின் முந்தையப்படத்திற்கும் அவரே இசையமைத்து இருந்தார்.
இந்தப்படத்தில் கவினுடன், லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
யுவன் பயோபிக்:
இந்தப்படம் தொடர்பான புரோமோஷன் தொடர்பான நேர்காணல் ஒன்றில் இயக்குநர் இளன் யுவனின் வாழ்க்கை கதை படம் தொடர்பான தகவல் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “ நான் யுவனிடம் அவரின் பயோபிக் தொடர்பான ஒன்லைன் ஒன்றை சொன்னேன். அவருக்கு அது பிடித்திருக்கவும் செய்திருந்தது. எல்லாம் சரியாக நடந்தால் விரைவில் அந்த ஒன்லைன் தொடர்பான ஸ்கிரிப்ட் வேலைகள் நடக்கும்” என்று பேசி இருக்கிறார்.
உருவாக்கத்தில் இருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா பயோபிக்!
முன்னதாக, பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக் உருவாக இருக்கிறது. இந்தப்படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார். ராக்கி, சாணிகாயிதம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப்படத்தை இயக்குகிறார். இளையராஜாவே இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், “எண்ணம் போல் வாழ்க்கை என்பதை நான் அடிக்கடி சொல்வது உண்டு. நீ என்னவாக உன்னை பற்றி யோசிக்கிறாயோ அதுவாகவே நீ மாறுவாய். நம்மில் பல பேர் இரவில் தூக்கம் இல்லை என்றால் இளையராஜாவின் பாடல்களை கேட்டு இதமாக, மெய் மறந்து தூங்குவோம்.
ஆனால் நான் பல இரவுகள் இளையராஜா சாரை போல நாம் நடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து நினைத்து தூங்காமல் படுத்து கொண்டு இருந்து இருக்கிறேன்.
இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாறில் நடிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். ஒன்று இசைஞானி இளையராஜா இன்னொன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதில் ஒன்று தற்போது நிறைவேறுகிறது. இது எனக்கு ஒரு விதமான கர்வத்தை கொடுக்கிறது. நான் இளையராஜா சாரினுடைய ரசிகன் மட்டும் அல்ல பக்தன்.
அவரது இசைதான் எனக்குத் துணை. இது எல்லோருக்குமே பொருந்தும். அதைத் தாண்டி அவரது இசை எனக்கு ஒரு நடிப்பு ஆசானும் கூட..
எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் இருந்து, இப்போது வரைக்கும், ஒரு காட்சியை படமாக்குவதற்கு முன்னால், அந்த காட்சிக்கு ஏற்றார் போல இருக்கக்கூடிய இளையராஜாவின் பாடலையோ அல்லது பின்னணி இசையையோ கேட்டுக் கொண்டு இருப்பேன்.
அந்த இசை அந்தக் காட்சியை எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுக்கும். அதை அப்படியே நான் உள்வாங்கி அந்த காட்சியில் நான் நடிப்பேன். ஒரு சில முறை வெற்றிமாறன் நான் அப்படி செய்வதை பார்த்திருக்கிறார்.
இளையராஜா கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப் பெரிய சவால் என்றும் இது மிகப்பெரிய பொறுப்பு என்றும் சொல்கிறார்கள் எனக்கு அப்படி தெரியவில்லை. இப்போதும் எனக்கு அதே இசை எப்படி நடிக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுக்கும்.
இப்போது மேலே மேடைக்கு வரும் பொழுது கூட, இளையராஜா சாரிடம் நீங்கள் முன்னே செல்லுங்கள்.. நான் பின்னே வருகிறேன் என்று சொன்னேன்.. உடனே அவர், நான் என்ன உனக்கு வழிகாட்டியா என்று கேட்டார்.
நான் இப்போது சொல்கிறேன்.. வழிகாட்டி தான் சார்… இத்தனை வருடங்களாக வழிகாட்டி கொண்டே தான் இருக்கிறீர்கள். இப்போதும் வழிகாட்டியாக இருந்து கொண்டு இருக்கிறீர்கள்.
நான் உங்களை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறேன். விடுதலை திரைப்படத்தில் ஒரு பாடலை நான் பாடும் பொழுது இளையராஜா அங்கே இருந்தார்.
உடனே நான் அவரிடம், சார் நீங்கள் இங்கே தான் இருப்பீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் எப்போதும் நான் உன்னுடன் இல்லை என்றுகேட்டார். என்னுடைய அம்மாவின் வயிற்றில் நான் இருக்கும் போதிலிருந்து நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன். ” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்