Actor Manobala : இயக்குநர், நடிகர், காமெடியன், தயாரிப்பாளர், யூடிபர் என பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா நினைவுநாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Manobala : இயக்குநர், நடிகர், காமெடியன், தயாரிப்பாளர், யூடிபர் என பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா நினைவுநாள் இன்று!

Actor Manobala : இயக்குநர், நடிகர், காமெடியன், தயாரிப்பாளர், யூடிபர் என பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா நினைவுநாள் இன்று!

Divya Sekar HT Tamil
May 03, 2024 06:00 AM IST

Actor Manobala Memorial Day : காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்த மனிதர் மனோபாலா. இன்றைய ட்ரெண்டிங்கிற்கு ஏற்ப மனோபாலாஸ் வேஸ்பேப்பர் (Manobala's Waste Paper) என்ற யூடியூப் சேனலை தொடங்கி வெற்றிகரமாகவே நடத்தி வந்தார்.

நடிகர் மனோபாலா நினைவு நாள்
நடிகர் மனோபாலா நினைவு நாள்

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த நடிகர் மனோபாலாவுக்கு உஷா என்ற மனைவியும், ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர். இவர் அமெரிக்காவில் வேலை பார்த்து அங்கு பணியாற்றும் போதே ஒரு தமிழ் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

பிரபல இயக்குநர், நடிகர், காமெடியன், தயாரிப்பாளர், யூடிபர் என பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா நினைவு நாள் இன்று. இந்த நாளில் அவர் குறித்த தகவல்களை திரும்பி பார்க்கலாம்.

நடிகர் மனோபாலா நாகபட்டினம் மாவட்டம் மருங்கூர் என்ற கிராமத்தில் டிசம்பர் 8ஆம் தேதி 1953ஆம் ஆண்டு பிறந்தார். மனோபாலாவின் இயற்பெயர் பாலச்சந்திரன்.இவருக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு சிறுவயது முதலே இருந்துள்ளது. 1970 ஆம் ஆண்டு அந்த கனவோடு சினிமா துறையில் வேலை செய்ய தொடங்கினார். 1970 ஆம் ஆண்டு கமல்ஹாசன் மனோபாலவை பரிந்துரை செய்ததன் மூலம் புதிய வார்ப்புகள் படத்தில் பாரதி ராஜாவின் உதவி இயக்குனராக தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். 

இதையடுத்து 1982 ஆம் ஆண்டு கங்கை என்ற முதல் படத்தை அவர் இயக்கினார். ஆனால் அந்த படம் அவருக்கு கைக்கொடுக்க வில்லை. அதன் பிறகு உங்கள் ரசிகன் என்ற படத்தை இயக்கினார். அந்த படமும் தோல்வியை தழுவியது. தோல்வியை கண்டு அஞ்சாத மனோபாலா 1985ஆம் ஆண்டு பிள்ளை நிலா என்ற படத்தை இயக்கினார்.அது வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இதையடுத்து தொடர்ச்சியாக அவர் எடுத்த படங்கள் சில

பாரு பாரு பட்டினம் பாரு- (1986)

 தூரத்துப் பச்சை- (1987)

ஊர்க்காவலன்- (1987)

சிறைப்பறவை- (1987)

என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்- (1988)

மூடு மந்திரம்- (1989)

மல்லுவேட்டி மைனர்- (1990) ஆகிய படங்களை இயக்கினார்.

மேலும் வெற்றி படிகள்- (1991), 

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்- (1991)

செண்பகத் தோட்டம்- (1992)

 முற்றுகை- (1993)

பாரம்பரியம்- (1993)

கருப்பு வெள்ளை- (1993

 நந்தினி- (1997)

 அன்னை- (2000)

சிறகுகள்- (2001) (தொலைக்காட்சித் திரைப்படம்)

 நைனா-(2002) உள்ளிட்ட 20 திரைப்படங்களை இயக்கி உள்ளார். 

இது மட்டும் இல்லாமல் இந்திப்படம் ஒன்றும் கன்னட படம் ஒன்றும் இயக்கி உள்ளார். இயக்குநர் என்பதோடு தன்னை குறுக்கி கொள்ளலாம் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் சிறப்பாக நடித்து வந்தார்.

இவர் மொத்தம் 

 40 திரைப்படங்கள்

16 தொலைக்காட்சி தொடர்கள் 

200க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

 காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்த மனிதர் மனோபாலா.  இன்றைய ட்ரெண்டிங்கிற்கு ஏற்ப மனோபாலாஸ் வேஸ்பேப்பர் (Manobala's Waste Paper) என்ற யூடியூப் சேனலை தொடங்கி வெற்றிகரமாகவே நடத்தி வந்தார்.

இந்நிலையில் 69 வயதான மனோ பாலா கல்லீரல் பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 3ம் தேதி சிகிச்சை பலனின்றி வீட்டிலேயே அவரது உயிர் பிரிந்தது. மனோபாலாவின் நினைவுநாளான இன்று அவர் குறித்த நினைவுகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பகிர்ந்து கொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.