Cheran on Meena: ‘கடவுள் மேல கடும்கோபம்; மீனாவுக்கு இப்படி நடந்திருக்க கூடாது; ’ - மேடையில் கண்ணீர் வடித்த சேரன்!
மீனா தன் கணவரை இழந்ததில் தனக்கு கடவுள் மீது கோபம் ஏற்பட்டது என்று சேரன் பேசியிருக்கிறார்.
மீனாவின் உடைய மறக்க முடியாத பிறந்தநாள் என்னுடைய படமான பொற்காலம் படத்தின் படப்பிடிப்பில் நடந்தது. அந்த இடம் முழுக்க முழுக்க கருவேலங்காடு; அந்த இடத்தில் பிறந்தநாள் கொண்டாட எதுவும் பெரிதாக எங்களால் செய்ய முடியவில்லை. இருப்பினும் காட்டிற்கு உள்ளேயே பிறந்த நாளுக்கான ஏற்பாடுகளை செய்து கிரேனில் வைத்து பூக்களைத் தூவினோம் அதை மீனாவே எதிர்பார்க்கவில்லை.
பொக்கிஷம் படத்திற்கு பத்மா ப்ரியாவின் பின்னணி குரலுக்கு ஒரு கலைஞரை தேர்வு செய்து பேச வைக்க வேண்டும் என்று நாங்கள் மும்மரமாக செயல்பட்டு கொண்டிருந்தோம். எந்த ஒரு கலைஞருமே நாங்கள் எதிர்பார்த்த அந்த குரலுக்கு ஒத்துவரவில்லை.
இந்த நிலையில் தான் எனக்கு மீனாவின் ஞாபகம் வந்தது. ஆனால் மீனாவுக்கு அடுத்த இரண்டு நாட்களில் கல்யாணம். எப்படி கேட்பது என்று தெரியாமல் தயங்கி தயங்கி கேட்டேன். ஆனால் அவர் பேசுவதற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்;ஒரே நாளில் வந்து பேசிக் கொடுத்து விட்டுச் சென்றார்.
மீனாவின் எல்லா சந்தோஷமான தருணங்களிலும் நான் அவருடன் இருந்திருக்கிறேன்;சந்தோஷப்பட்டு இருக்கிறேன். அவருடைய சோகமான காலங்களிலும் அவருடன் இருந்திருக்கிறேன்; அவருடைய சோகத்திலும் நான் பங்கு எடுத்திருக்கிறேன்.
மீனாவுக்கு இது நடந்திருக்கக் கூடாது; அவரது கணவர் அவரை விட்டுச் சென்றிருக்கக் கூடாது. இந்த சமயத்தில் தான் எனக்கு கடவுள் மீது கோபமும் கேள்வியும் வந்தது..ஏன் கடவுள் இப்படி செய்தார் என்று கேட்கத் தோன்றியது. ஆனால் இதுதான் சரி, இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள் என்று தெரியும்…
இப்போது நாமெல்லாம் கேரவன் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். கேரவன் இல்லையென்றால் தற்போது நமக்கு பிரச்சினை வருகிறது. அப்போதெல்லாம் கேரவன் கிடையாது. பொற்காலம் படத்தில் ஒரு காட்சி. முரளி முள்ளுக்கட்டு தூக்கி வரவேண்டும். மீனா ஒரு இடத்திசேலையை காய போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் படத்தின் கேமரா மேன் பிரியன் அவர் கட்டியிருந்த சேலை நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டார். மீண்டும் ரூமிற்குச் சென்று சேலையை மாற்றி வர வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் ஆகிவிடும். லைட் போய்க் கொண்டிருக்கிறது;நான் டென்ஷனாக உட்கார்ந்து இருந்தேன்.
என்னிடம் வந்த மீனா ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்றார்.. நிலவரத்தைச் சொன்னேன். மேக் அப் மேன் மற்றும் அவருடைய காஸ்டியூம் டிசைனரை கூப்பிட்டு நான்கு பக்கமும் சேலையை மறைவாக பிடிக்க வைத்துவிட்டு அங்கேயே உடையை மாற்றி விட்டார். நாள் மறக்க முடியாத அனுபவம் அது” என்று பேசினார்.
நன்றி: பிஹைண்ட்வுட்ஸ்
டாபிக்ஸ்