'ஆட்டோகிராஃப் வேற, 96 வேற, பிரேமம் வேற.. விரைவில் ஆட்டோகிராஃப் ரீ-ரிலீஸ்’: உடைத்துப் பேசிய இயக்குநர் சேரன்
- ’ஆட்டோகிராஃப் படத்துக்கு ஒரு ஃபேன்ஸ் இருக்காங்க. அவங்க மீண்டும் படம் பார்க்கலாம்ன்னு ஒரு ஐடியாவுக்கு வருவாங்க. அந்தப் படம் என்னைய திருப்பி, இந்த ஜெனரேஷன் பசங்ககிட்ட ஞாபகப் படுத்தும்’ என இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் பேசியிருக்கிறார்.

'ஆட்டோகிராஃப் வேற, 96 வேற, பிரேமம் வேற.. விரைவில் ஆட்டோகிராஃப் ரீ-ரிலீஸ்’: உடைத்துப் பேசிய இயக்குநர் சேரன்
இயக்குநர் மற்றும் நடிகர் சேரன், முதன்முறையாக நரிவேட்டை என்னும் மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார். அப்படத்தின் நாயகனாக டொவினோ தாமஸ் நடித்திருக்கிறார். இந்நிலையில் அப்படம் குறித்தும், ஆட்டோகிராஃப் படம் குறித்தும் நிறைய விஷயங்களை இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் இந்தியா கிளிட்ஸ் நேர்காணலில் பகிர்ந்து இருக்கிறார். அந்த நேர்காணல் மே 15ஆம் தேதி இந்தியா கிளிட்ஸ் யூடியூபில் வெளியாகி இருக்கிறது. அதன் தொகுப்பினைப் பார்க்கலாம்.
’நரிவேட்டை என்னும் மலையாளப் படத்தில் சேரன் சார் நீங்க நடிச்சிருக்கீங்க? அதைப் பற்றி சொல்லுங்க?
நாம நிறைய நடிகர்களை நடிக்க வைச்சிருக்கோம். நம்மளும் நிறைய டைரக்டர் படங்களில் நடிச்சிருக்கோம். முதல்தடவை மலையாளத் திரையுலகில் நடிக்கிறதற்கு காரணம், இந்த நரிவேட்டை படத்தின் இயக்குநர் அனுராஜ் அவர்களுடைய முயற்சிக்குத் தான் நன்றி சொல்லணும்.