20 Years of Kangalal Kaidhu Sei: பிரியாமணியின் முதல் தமிழ்ப் படம்! சிட்டி ஸ்டைலில் பாரதிராஜாவின் ரொமாண்டிக் த்ரில்லர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  20 Years Of Kangalal Kaidhu Sei: பிரியாமணியின் முதல் தமிழ்ப் படம்! சிட்டி ஸ்டைலில் பாரதிராஜாவின் ரொமாண்டிக் த்ரில்லர்

20 Years of Kangalal Kaidhu Sei: பிரியாமணியின் முதல் தமிழ்ப் படம்! சிட்டி ஸ்டைலில் பாரதிராஜாவின் ரொமாண்டிக் த்ரில்லர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 20, 2024 05:15 AM IST

வழக்கமான பாரதிராஜா படம் போல் இல்லாமல் முழுக்க சிட்டியை மையமாக வைத்தும், வெளிநாடுகளில் கலர்பஃபுல்லான லொக்கேஷன்களின் படமாக்கப்பட்டதாகவும் கண்களால் கைது செய் படம் அமைந்திருக்கும்.

கண்களால் கைது செய் திரைப்படம்
கண்களால் கைது செய் திரைப்படம்

ஆனால் ரிலீஸுக்கு பின்னரோ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனது. இந்த படம் பாரதிராஜாவின் மற்ற படங்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. கதை களம் மட்டுமில்லாமல் படத்தின் முக்கால் வாசி காட்சிகள் வெளிநாட்டில் வைத்தே படமாக்கப்பட்டிருக்கும். அப்படி பார்க்கையில் பாராதிராஜாவின் சிட்டி ஸ்டைல் மேக்கிங்காகவே கண்களால் கைது செய் படம் அமைந்திருந்தது.

செல்வந்தராக இருக்கும் ஹீரோவுக்கு கண்ணில் படும் கவர்ச்சிகராமான பொருள்களை திருடும் வியாதி. இவரை கண்காணிக்கும் பொறுப்பில் நியமிக்கப்படும் பிரியாமணியை ஒருதலையாக காதலிக்கிறார் வசீகரன். பிரியாமணி மீது திருட்டு பழி சுமத்தப்பட அதிலிருந்து அவர் மீள்வதும், வசீகரன் காதலை அவர் ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பதே படத்தின் கதை.

ரொமாண்டிக் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்துக்கு சுஜாதா வசனம் எழுதியிருப்பார். இந்த படத்துக்கு இவர்தான் வசனம் எழுதினாரா என்கிற சுவடே தெரியாத வண்ணம் கதையோடு ஒன்றிய வசனமாகவும், தனது ட்ரேட்மார்க் ஸ்டைலை வெளிப்படுத்தாமலும் சுஜாதாவின் வசனங்கள் இருக்கும்.

கிராமிய வாழ்க்கையை நம் கண்முன்னே கொண்டு வருவதில் கைதேர்ந்த பாரதிராஜா சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக் போன்ற த்ரில்லர் கதைகளிலும் முத்திரை பதித்துள்ளார். காதல், த்ரில்லர் ஜானர் படங்களில் பலமுறை தன்னை நிருபித்திருக்கும் பாரதிராஜா காதலும், த்ரில்லரும் கலந்த கண்களால் கைது செய் படத்தில் ஆமை வேக திரைக்கதை, விறுவிறுப்பு இல்லாத காட்சிகள், வழக்கத்துக்கு மாறா போரான மேக்கிங் என ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் விதமாக இந்த படத்தை உருவாக்கியிருப்பார்.

படத்தில் மிகப் பெரிய ஆறுதலாக ஒளிப்பதிவாளர் கண்ணனின் மாறுபட்ட கேமர கோணங்களும், வெளிநாடுகளின் கலர்புல்லான லோக்கேஷன்களும் தான். இதற்கு அடுத்தபடியாக இசைப்புயன் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல் மற்றும் பின்னணி இசை.

படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டான நிலையில் என் உயிர் தோழி, அனார்களி, அழகிய சிண்ட்ரெல்லா ஆகிய பாடல்கள் படம் வெளியான காலகட்டத்தில் பல முறை ஒளித்த, ஒலித்த பாடல்களாக அமைந்தன.

பாரதிராஜா படங்களின் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக அமைந்திருந்த கண்களால் கைது செய் படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.