Director Bhagyaraj: விளக்கு வச்ச நேரத்தில தந்தானன்னா.. இளையராஜாவை வச்சு செக்ஸி பாட்டு தந்த பாக்யராஜ்.. இதுதான் உண்மை!
Director Bhagyaraj: முந்தானை முடிச்சு படத்தின் விளக்கு வச்சநேரத்துல பாடல் உருவான விதம் குறித்து நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் ரியாலிட்டி ஷோவில் பேசியுள்ளார்.

Director Bhagyaraj: நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், தன் வித்தியாசமான கதை எழுதும் திறனாலும், மக்களை ஈர்க்கும் பேச்சாலும் மிகவும் பிரபலமானவர். இவர், ராஜபார்வை எனும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று, தனக்கு இசையமைப்பாளர் இளையராஜாவுடன் நடந்த ஒரு சுவாரசியமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில், முந்தானை முடிச்சு படத்தில் இடம்பெற்ற விளக்கு வச்ச நேரத்தில பாடல் உருவான விதம் பற்றி பேசி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.
டேக் போயிட்டே இருக்கு
அந்த நிகழ்ச்சியில் பேசும் போது, "இளையராஜா சாரும், ஜானகி அம்மாவும் பாடிட்டு இருக்காங்க. எனக்கு மட்டும் அந்த பாட்டோட வார்த்தைகள் பிடிக்கல. நல்ல ட்யூன், நல்லா பாடக்கூடிய ஆட்கள் இருந்தும் பாட்டு ஓபன் ஆகும் போது வர்ற வார்த்தைகள் எனக்கு பிடிக்கல.
'அருவிக்கரை ஓரத்திலே நின்று நீராடினான்' அப்படின்னு முதல் லைன் வருது. என்னடா இது முதல் வார்த்தையே இப்படி இருக்குன்னு எனக்கு பிடிக்கவே இல்ல. 5வது டேக் 6வது டேக்குன்னு போயிட்டே இருக்கு.
புது பல்லவிக்கு ராஜா ஒத்துக்கல
அப்புறம் அப்படியே யோசிட்டுட்டே இருந்தேன். எனக்கு டக்குன்னு யோசனை வந்தது. வேற ஒரு பல்லவி கிடைச்சதும் உடனே பேப்பர எடுத்த எழுத ஆரம்பிச்சிட்டேன். விளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான். மறைஞ்சு நின்னு பாக்கையில தாகம் தந்தான்னு.. அவன் கொடுக்க நான் புடிக்கன்னு அடுத்த அடுத்த வார்த்தைய போட்டு நான் எழுதிட்டு இருக்கேன். இத பாத்துட்டு இளையராஜா இல்ல இல்ல இந்த வரிக்கு எல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு.
பிடிவாதமாக நின்ன ராஜா
அப்போ நான் உடனே ஜானகி அம்மாகிட்ட போய் குடுக்குறேன். இத படிங்க. அதவிட இது நல்லா இருக்குன்னு தெலுங்குலயே சொல்றேன். அவங்களுக்கு தெலுங்குல பாட்டு எழுதி கொடுத்துட்டு நான் வாசிச்சும் காட்டுறேன். இத பாத்துட்டு ஜானகி அம்மா, இளையராஜாகிட்ட ராஜா இது நல்லா இருக்குன்னு சொல்றாங்க. உடனே கோபமான ராஜா, என்ன நீங்க ரெண்டு பேரும் தெலுங்குல பேசிகிட்டா எல்லாம் ஓகேவா. இதுக்கெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்னு பிடிவாதமா நிக்குறாரு.
இல்ல இல்ல அவங்க தெலுங்குல எழுதிகிட்டாங்க. நீங்க இப்படியே பாடிடலாம் இந்தாங்கன்னு புதுசா எழுதுன பல்லவிய தர்றேன். அவரு பாட மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்க நான் அவரை சமாதானம் செய்யுறேன்.
லைன விட்ட ராஜா
அப்புறம் அவரு வேற வழியில்லாம பாடுறேன்னு ஒத்துக்கிட்டாரு. அப்போ திடீர்ன்னு கடைசி பல்லவி வரும் போது ராஜா லைன விட்டுட்டாரு. அதுனால விளக்கு வச்ச நேரத்துல தந்தானன்னா... மறைஞ்சு நின்னு பாக்கையில தரினானன்னா.. அப்படின்னு பாடிட்டாரு.
அப்புறம் வந்து கடைசி நேரத்துல கொடுத்ததால எனக்கு லைன் கரெக்டா தெரியல. அதுனால தான் அப்டின்னு சொல்லிட்டு ஒன் மோர் போகலாம்ன்னு சொன்னாரு. அதுக்குள்ள நான் டேக் ஓகேன்னு சொல்லிட்டேன்.
நெனச்சத விட செக்ஸி
உடனே இளையராஜா, நான் அந்த வார்த்தையே பாடலையேன்னு கத்திட்டு இருக்காரு. அப்போ, முதல்ல இந்த பாட்டு செக்ஸியா இருக்கு பாட மாட்டேன்னு சொன்னீங்க. ஆனா நான் நெனச்சதவிட இப்போ தான் செக்ஸியா இருக்கு சொல்லிட்டேன். அவருக்கு புரியல.
விளக்கு வச்ச நேரத்துல தன்னான்னன்னா... அப்படின்னா அது என்ன வேணும்னாலும் அர்த்தம் எடுத்துக்கலாம். அதுனால தான் டேக் ஓகேன்னு சொன்னேன்னு சொன்னதும் நீங்க ரொம்ப மோசம் அப்படின்னு சொன்னாரு. நான் எதிர்பார்த்தத விட நல்லா கிடைச்சிருக்கு ரொம்ப சந்தோஷம்ன்னு சொல்லி இந்த பாட்ட ரெடி பண்ணுனோம் என சொல்ல அரங்கமே சிரித்தது.
