Director Bhagyaraj: இமெயில் வருகையால் இளைஞர்கள் செருப்படியில் இருந்து தப்பித்தார்கள் - பாக்யராஜ் கேலி பேச்சு
இ-மெயில் வந்ததால் செருப்படியில் இருந்து தப்பிக்கும் சூழ்நிலை இந்த கால இளைஞர்களிடம் உள்ளது என்று நடிகர், இயக்குநர் பாக்யராஜ் நகைச்சுவையாக கூறியுள்ளார்.
இமெயில் என்ற படத்தின் நிகழ்ச்சியில் நடிகர், இயக்குநர் பாக்யராஜ் பங்கேற்றார். அப்போது வர் பேசியதாவது:
இமெயில் வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் பேப்பரில் தான் எழுதி அனுப்புவோம். இமெயில் வருகைக்கு பின் பேப்ரில் எழுதுவது குறைந்தது. இதனால் மரங்கள் வெட்டுவது குறைந்து இயற்கை வளமும் பாதுகாக்கப்பட்டது.
மிக முக்கியமாத பல இளைஞர்கள் செருப்படியில் இருந்து தப்பித்தார்கள். இதற்கான வாய்ப்பையும் இமெயில் தந்தது.
முன்பெல்லாம் ஒரு பெண்ணிடம் காதலை சொல்ல லவ் லெட்டர் கொடுத்தால், உடனே அந்த பெண் கோபத்துடன் செருப்பை கழட்டும் சூழல் இருந்துத. ஆனால் இமெயில் வருகைக்கு பின் அந்த அவசியம் இல்லாமல் போனது. பயம் காரணமாக நாம் ஒருவரிடம் சொல்ல முடியாத விஷயங்ளை கூட இமெயிலில் சொல்லலாம்.
இவ்வாறு பாக்யராஜ் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்