Illayaraja Biopic: தூக்கப்பட்ட பாலிவுட் டைரக்டர்; தமிழ் இயக்குநரை நுழைக்கும் தனுஷ்; இளையராஜா பயோபிக் நிலவரம் என்ன?
கிராமிய பின்னணி கொண்டவரும், தமிழ் கலாச்சாரம் பற்றி நன்கு தெரிந்த ஒருவரை இயக்குநராக கமிட் செய்யலாம் என்று படக்குழு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இளையராஜா!
நடிகர் தனுஷின் நடிப்பில், கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் அவர் தற்போது தான் இயக்கி, நடித்திருக்கும் ராயன் படத்தை வெளிக்கொண்டு வரும் வேலைகளில் மும்மரமாக இருக்கிறார்.
அண்மையில் படத்தின் போஸ்டர் மற்றும் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின.
இதனிடையே நடிகர் தனுஷ் பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் வாழ்க்கை கதையில் நடிக்க இருப்பதாகவும், இந்தப்படத்தை பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான தகவல்களின் படி, அந்த படத்தில் பால்கிவிற்கு பதிலாக தமிழ் இயக்குநர் ஒருவரை கமிட் செய்யலாம் என்ற திட்டத்திற்கு படக்குழு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
