Vanangaan Box Ofiice: வரவேற்பு இல்லாமல் போன வணங்கான்.. ஆரம்பம் முதலே சறுக்கல்.. 2ம் நான் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்..
Vanangaan Box Ofiice: இயக்குநர் பாலாவின் வணங்கான் படம் 2ம் நாளில் பெற்ற பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து இந்த செய்தியில் காணலாம்,

Vanangaan Box Ofiice: தமிழ் சினிமா ரசிகர்களை உலுக்கி எடுத்த சேது படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் பாலா. இந்த படத்தைத் தொடர்ந்து இவர் எடுக்கும் அனைத்து படங்களும், குரூர கருத்துகளையும் மனிதர்களுக்குள் இருக்கும் வன்மத்தையும் ரத்தமும் சதையும் மனதளவில் நாம் யூகிக்க முடியாத காட்சிகளை வைத்து தன் படங்களை இயக்கி வருகிறார்.
சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து தனது படைப்பின் மூலம் பேசிவரும் பாலா, இயக்கியுள்ள படம் தான் வணங்கான். இந்தப் படத்தில் முதலில் நடிக்க சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு பின் அவர் விலகியதை அடுத்து அருண் விஜய் கதையின் நாயகனாக உருவெடுத்துள்ளார்.
தாமதமான ரிலீஸ்
அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் உள்பட பலர் நடித்து த்ரில்லர் படமாக வணங்கான் வெளியாகியுள்ளது. சில பிரச்னைகள் காரணமாக திட்டமிட்டபடி படத்தின் முதல் காட்சி வெளியாகவில்லை. தாமதமாக படம் ரிலீஸ் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வணங்கான் படத்துக்கு நேர்மறையான விமர்சனங்களும் வெளியாகின்றன. ரிலீஸ் தாமதம் காரணமாக படம் முதல் நாள் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
இருப்பினும், படம் ரூ. 0.85 கோடி வசூலித்திருப்பதாக Sacnilk.com தெரிவித்துள்ளது. படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்பு காரணமாக இரண்டாம் நாள் முதல் வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, வணங்கான் திரைப்படம் வெளியான 2ம் நாளான நேற்று, 1.17 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது. இது முதல்நாளை வைத்து பார்க்கும் போது அதிகம் என்றாலும், பொதுவாக பார்க்கும் போது குறைந்த அளவு வசூலையே பெற்றுள்ளது.
காலியாக இருக்கும் தியேட்டர்கள்
பொதுவாகவே, படம் வெளியான முதல் நாள் அந்தப் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தான் அதன் வசூல் நிலவரம் ஏறுமா இறங்குமா என்பதை கணிக்க முடியும். அந்த வகையில், பாலாவின் வணங்கான், ரிலீஸ் அன்றே படம் வெளியாகுமா இல்லையா என்பதை தெளியாக அறிவிக்க முடியாமல் குழம்பி, பின் தாமதமாக ரிலீஸ் செய்யப்பட்டது.
இதனால், படம் பார்க்க வந்த ரசிகர்கள் அப்செட் ஆகினர். இந்த காரணத்தால் முதல் நாள் சரியான விமர்சனம் கிடைக்காத நிலையில், அடுத்த நாளும் படம் பார்க்க மக்கள் போதிய ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். மேலும், பாலா படம் என்றால் இப்படித் தான் இருக்கும் என முத்திரை குத்தப்பட்டதால் பெரும்பாலான தியேட்டர்கள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
வணங்கான் படத்தின் கதை
காது கேளாத வாய் பேச முடியாத ஆதரவற்றோர் இல்லத்தில் கோட்டி (அருண் விஜய்) வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள சிலர், அங்கிருக்கும் கண் தெரியாத பெண்பிள்ளைகள் குளிப்பதை பார்த்துவிட, அவர்களில் இருவரை கொடூரமாக கொன்று காவல்நிலையத்திலும் ஆஜராகி விடுகிறார் கோட்டி.
அதன் பின்னர் என்ன ஆனது? அவன் என்ன காரணத்திற்காக அந்த கொலையை செய்தான் என்று நீதிமன்றமும், காவல்துறையும் துருவி, துருவி கேட்கிறது. அதற்கு கோட்டி பதில் சொன்னானா இல்லையா என்பது தான் படத்தின் கதை!
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்