கூச்சமாக இருந்தது.. என்னை முதல் முதல் புகை பிடிக்க வைத்தது இயக்குனர் பாலா - நினைவுகளை பகிர்ந்த நடிகர் சூர்யா!
பாலா திரையுலகுக்கு வந்து 25 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி பாலா 25 விழாவும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா என்னை முதல் முதல் புகை பிடிக்க வைத்தது இயக்குனர் பாலா தான். நந்தா படத்தில் எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாது என தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பாலாவின் 25 ஆண்டு கால சினிமா பயணத்தை வாழ்த்து விதமாக நடிகர் சூர்யா மற்றும் சிவகுமார் தங்க சங்கிலியை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பால இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் பாலாவின் 25 மற்றும் வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
அந்த அழைப்பு தான் என் வாழ்க்கையே மாற்றியது
இதில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், “2000 ஆம் ஆண்டு நெய்காகாரப்பட்டியில் படப்பிடிப்பு ஒன்றில் இருக்கும் பொழுது ஒரு அழைப்பு வந்தது சூர்யா நீ எந்த ஒரு படமும் கமிட் பண்ணிக்க வேண்டாம் நாம் அடுத்து படம் பண்ணுவோம் என்று சொன்னார். அந்த போன் காலை இன்று வரை என்னால் மறக்க முடியாது. அந்த அழைப்பு தான் என் வாழ்க்கையே மாற்றியது.
சேது படம் பார்த்த பிறகு அதில் இருந்து வெளி வருவதற்கு 100 நாட்கள் ஆகியது. அப்படி ஒரு படைப்பிற்கு பிறகு பாலாவின் அடுத்த திரைப்படத்தில் நான் கதாநாயகனாக இருப்பேன் என்பதை நினைத்து கூட பார்க்கவில்லை. என்னை நானே புரிந்து கொள்வதற்கு முன்பாக என்னை வைத்து திரைப்படம் இயக்க முன்வந்தவர் பாலா.
அண்ணா என்று சொல்வது வெறும் வார்த்தை அல்ல
இரண்டாயிரத்தில் இந்த கால் வரவில்லை என்றால் நான் இந்த இடத்தில் கிடையாது. நந்தா படம் பார்த்து பின்பு தான் காக்க காக்க படம் ஜி கௌதம் வாசுதேவ் மேனன் வாய்ப்பு கொடுத்தார், காக்க காக்க பார்த்த பிறகுதான் ஏ ஆர் முருகதாஸ் கஜினி திரைப்படம் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
பாலா உறவுகளுக்கு மதிப்பளிக்க கூடியவர். அண்ணா என்று சொல்வது வெறும் வார்த்தை அல்ல அது பெரிய உறவு. எப்பவும் நிரந்தரமாக இருக்கின்ற அண்ணன் தம்பி உறவு கொடுத்த அண்ணா பாலாவிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். என்றென்றும் கடமைப்பட்டிருக்கின்றேன் 25வது ஆண்டு இன்று எல்லார் கூடவும் சேர்ந்து நானும் கொண்டாடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன். மீண்டும் பேரன்பும் மறையாதைக்கு உரிய அண்ணன் இந்த பயணத்தை கொடுத்ததற்கு இந்த வாழ்க்கை கொடுத்ததற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.
எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாது
என்னை முதல் முதல் புகை பிடிக்க வைத்தது இயக்குனர் பாலா தான். நந்தா படத்தில் எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாது. ஆனால் முதல் நாள் முதல் காட்சியை நான் படிக்கட்டில் இறங்கி சிகரெட் பிடிக்க வேண்டும் முதல் முதலில் ஒரு மிகப்பெரிய பட வாய்ப்பு அத்தனை பேர் இருக்கிறார்கள் ஆனால் எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லை என அவர்களிடம் கூற கூச்சமாக இருந்தது. இருப்பினும் அதனை தெரிவித்தேன். ஒட்டுமொத்த லைட் யூனிட்டும் கீழே இறங்கி விட்டார்கள் எனக்கு அவமானமாக இருந்தது. உடனடியாக அதை கற்றுக்கொள்வதற்காக 300 தீக்குச்சியை நான் செலவழித்து மாடியில் ஏறி இறங்கி அதனை கற்றுக் கொண்டேன் அதன் பிறகு அது ரோலக்ஸ் படத்திற்கு தான் உதவியாக இருந்தது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்