கங்கையில் தூக்கி எறியப்படும் பிணத்துக்காக காத்திருந்த அகோரி.. சிறுவயதில் தத்துப்பிள்ளை.. வலிகளை சொன்ன இயக்குநர் பாலா
கங்கையில் தூக்கி எறியப்படும் பிணத்துக்காக காத்திருந்த அகோரி.. சிறுவயதில் தத்து.. வலிகளை சொன்ன இயக்குநர் பாலா
சமீபத்தில் இயக்குநர் பாலா, திரைத்துறையில் அறிமுகமாகி 25ஆண்டுகள் ஆன விழாவும் வணங்கான் படத்தின் விழாவும் கொண்டாடப்பட்டது.
இதில் நடிகர் சிவகுமார் இயக்குநர் பாலாவிடம் மேடையில் வைத்து மக்கள் மத்தியில் இருக்கும் பல்வேறு கேள்விகளையும் கேட்டார். அதற்கு இயக்குநர் பாலா பதில் அளித்துள்ளார். அதன் தொகுப்பு இது.
கேள்வி: மயான ஊழியர், பிச்சைக்காரர், திருடர், பரதேசி.. உங்கள் படத்தில் வரும் கேரக்டர் எல்லாமே இப்படி தான் இருக்காங்க. நீங்கள் காதல் படம் எடுத்தால் கூட கடைசியில் பைத்தியம் ஆகிடுறான். அழுக்கு இல்லாமல் டீசன்ட்டான ஒரு படம் எடுக்கமாட்டீங்களா?
பதில்: உருகி அழறது சோகம். அழவைக்கிறதும் சோகமாகத் தான் இருக்கும்.
கேள்வி: நான் கடவுள் படத்திற்காக சந்நியாசம் போனீங்களா.. அகோரி மனித மாமிசம் சாப்பிடுறாங்களா?
பதில்: அதெல்லாம் நேரில் பார்த்திருக்கேன். அகோரியில் 120 குழுக்கள் இருக்கு. நரமாமிசம் சாப்பிடுறவங்க, விபூதி மட்டும் பூசிக்கிறவங்கன்னு நிறைய இருக்கு. காசியில் பத்து பிணங்கள் எரிய தயார்நிலையில் காத்திருக்கும். பத்து பிணங்கள் எரிந்துகொண்டு இருக்கும்.
அகோரி மனித மாமிசம் உண்பதைப் பார்த்தேன் - இயக்குநர் பாலா
இரவு நேரங்களில் பாதி எரிந்த பிணங்களை கங்கை நதியில் தூக்கி எறிந்துவிடுவார்கள். அதை ஒரு அகோரி, கையில் ஒரு சப்பாத்தி மாவை எடுத்துக்கொண்டுபோய், அந்த பிணத்தை எடுத்துச் சாப்பிடுறான்.
அதைப் பார்த்திட்டு ஒரு மாதம் தூக்கம் வரலை. அவங்களுக்கு அதில் ஒரு நியாயம் இருக்கு. நீங்கள் தான் பாவிகள். ஆடு, மாடுகளை வெட்டித்திங்குறீங்க. நாங்கள் வெட்டியாக எரிந்து சாம்பலாகப் போகும் உடம்பை சாப்பிடுகிறோம். வெஜிடேரியனை சாப்பிடுறதே பாவம் தான் அப்படின்னு அகோரிகள் சொல்றாங்க.
கேள்வி: கமல், ரஜினி மாதிரி ஹீரோக்கள் கால்ஷீட் கொடுத்தால் படம் செய்வீங்களா?
பதில்: வாய்ப்பு இல்லை சார். அவங்களோட பாதை வேற. என்னோட பாதை வேற.
கேள்வி: பாலா வந்து முதன்முதலாக படத்துக்கு பூஜைபோட்டு 31 வருஷம் ஆகுது. 1993 டிசம்பர் மாதம் 15ஆம் தேதி, ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் இளையராஜா குத்துவிளக்கேற்றி, பாலுமகேந்திரா தலைமையில் ‘அகிலன்’ படத்தை ஆரம்பிச்சோம். அன்னிக்கு பாலுமகேந்திரா தன் வியூஃபைண்டரை, சிஷ்யன் பாலாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அதே நாள் படம் டிராப் ஆகிடுச்சு. அடுத்து மூன்றரை வருஷம் எப்படி உயிரை கையில் பிடிச்சிட்டு இருந்தார்னு தெரியல. அடுத்து 1997 ஜூன் மாதம் பூஜை போட்டு, விக்ரமை வைச்சு சேதுவை எடுத்தார்.
பல பிரிவியூ தியேட்டரில் படம் ஓடுது. யாரும் ரிலீஸ் செய்யமுன்வரலை. அடுத்து படம் 1999 டிசம்பர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆச்சு, சேது. அடுத்து ஒரு வாரத்தில் படம் சூப்பராக போகுது. அடுத்து சூர்யாவுக்குப் பெயர் வாங்கித் தந்த படம், நந்தா. சின்ன வயதில் தத்துகொடுக்கப்பட்ட பையன் பாலா, அந்த உணர்வு சூர்யா அவங்க அம்மாவை பார்க்கும்போது படத்தில் தெரியும். அதில் கிளைமேக்ஸில் சூர்யாவுடைய பல் இடுக்கில் ரத்தம் வந்துகிட்ட, விஷம் வைச்சது தனக்குத் தெரியும்னு சொல்வார். இதை எப்படி யோசிச்சீங்க?.
பதில்: அதை நான் கிரியேட் செய்யலை சார். நான் ரீ-கிரியேட் தான் செய்திருக்கேன். இந்த கிளைமேக்ஸ் என்னோடது இல்லை. தனியாவர்த்தனம் (Thaniyavarthanam) என்னும் மலையாளப் படம், மம்மூட்டி நடிச்ச படம், இதே மாதிரி கிளைமேக்ஸ். அந்த கிளைமேக்ஸை வைக்கணும் என்பதுக்காகவே, முன்னாடி நந்தா கதையை டெவலப் பண்ணுனேன்.
நந்தா படத்தில் அம்மா கதாபாத்திரத்தின்மேல் இருக்கும் ஏக்கம் இருக்கா உங்களுக்கு?
பதில்: எனது பெற்றோருக்கு மொத்தம் எட்டு குழந்தைகள். அன்பு பிரிஞ்சு போயிடுது. அதனால் தனியாக ஒரு கவனம் வேண்டும் என சின்ன வயதிலேயே மனரீதியாக தொந்தரவுக்கு உள்ளாகிட்டேன்.
நன்றி: பிஹைண்ட்வுட்ஸ் டிவி
டாபிக்ஸ்