இருளான அறையில் பாலா சாரின் செயல்.. அந்த விசுவல் தான் சாட்சி.. அவர் கையில் இருந்து பெற்ற ஐந்து ரூபாய்.. மாரி செல்வராஜ்
இருளான அறையில் பாலா சாரின் செயல்.. அந்த விசுவல் தான் சாட்சி.. அவர் கையில் இருந்து பெற்ற ஐந்து ரூபாய் என இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய உரையாடலைக் காண்போம்.
இருளான அறையில் பாலா சாரின் செயல்.. அந்த விசுவல் தான் சாட்சி.. அவர் கையில் இருந்து பெற்ற ஐந்து ரூபாய் என இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது வைரல் ஆகியிருக்கிறது.
வணங்கான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் இயக்குநர் பாலாவின் 25ஆம் ஆண்டு சினிமா பயணத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது நெகிழ்ச்சியை உண்டுசெய்திருக்கிறது.
இதுதொடர்பாக பாலா 25ஆம் ஆண்டு மேடையில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், ‘’பாலா சார். என் வாழ்க்கையில் மிக முக்கியமான மனுஷன். சட்டக்கல்லூரியில் படிக்கும்போது, இவன் தான் பாலா புத்தகத்தைப் படிச்சேன். சினிமா நம்ம போகலாம்ன்னு ஒரு ஆசை வருவதற்குக் காரணம், அந்த புத்தகம்.
சென்னை வந்து வாய்ப்புத்தேடி அலையவும் அந்தப் புத்தகம் தான் காரணம். நான் ராம் சார்கிட்ட சேர்ந்ததுக்கு அப்புறம் எங்க டைரக்டர் சொல்வார், நாமெல்லாம் பாலு மகேந்திரா சார் ஸ்கூல் என்பார். நானும் அந்த ஸ்கூல்ல இருக்கேன்னு சந்தோஷம்.
பாலா சார் என்னை பார்க்க அழைத்த தருணம்: மாரிசெல்வராஜ்
பரியேறும் பெருமாள் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் நிறைய பாராட்டுகள் வந்திட்டு இருந்துச்சு. எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. நாம் புதுசா ஒரு படம் எடுத்திருக்கோம். ராம் சாரின் உதவி இயக்குநர் என்பதால், நம்மைக் கொண்டாடுறாங்கன்னு நினைச்சேன்.
திடீர்னு ஒரு சில நாட்கள் கழித்து போன் வந்துச்சு, பாலா சார் மீட் பண்ணக் கூப்பிடுறார்னு. என்னால், நம்பவே முடியல. ரொம்ப எமோஷனலாக இருந்துச்சு. அவர்கிட்டப் போய் என்ன பேச அப்படின்னு தெரியாம தனியாக தான் போனேன்.
ரூமில் இருட்டறையில் உட்கார்ந்திருந்தார். ரொம்ப இருட்டறையாக இருந்தது. இருள் சூழ்ந்த அறையில் ஒருவர் உட்கார்ந்திருக்கும்போது, அவர்கிட்ட என்ன போய் பேசன்னு ஒரு பயம் இருக்கும்ல, அது எனக்கு இருந்துச்சு.
பாலா சார் கட்டிப்பிடிச்சு, கை கொடுத்தார். தம் அடிப்பியான்னு கேட்டார். இல்லை சார்னு சொன்னேன். தண்ணி அடிப்பியான்னு கேட்டார். இல்லை சார்னு சொன்னேன்.
நானும் ராம் சாரும் பரியேறும் பெருமாள் படத்தை பாலா சார் பார்க்கணும்னு ஆசைப்பட்டோம். ஆனால், பாலா சார் அந்தப் படத்தைப் பார்த்திருக்கார். என்னை சொல்லப்போறார்னு வெயிட் செய்திட்டு இருந்தேன். ஒன்னுமே பேசல. டக்குனு, ஒரு டிராவில் இருந்து தங்கசெயினை எடுத்து எனக்குப் போட்டுட்டார்.
ஒரு இருள் சூழ்ந்த அறையில் வெளிச்சமான பாராட்டு முதன்முறையாக கிடைக்குது. அதுக்கு நான் எப்படி ரியாக்ட் செய்யணும்னுகூட தெரியல.
போட்டோ எடுக்கல. ஒன்னும் பண்ணல. இதை யார்கிட்டேயும் சொல்லணும் இல்லன்னு சொல்றார், பாலா சார். மேலும், இந்த மாதிரி படங்கள் பண்ணுன்னு சொல்லி, ஒரு செயின் போட்டார். அந்த உரையாடல் முடிஞ்சிருச்சு.
நானும் வெளியே வந்திட்டு, பாலா சார் போட்ட செயினோடு, பைக் எடுத்துக்கிட்டு, சென்னை வீதியில் போற ஃபீல் பத்தி, என் டைரக்டர்கிட்ட போன் செய்து சொன்னேன்.
எனக்கும் பாலா சாருக்கும் நிறைய அரசியல் முரண் இருக்கு: மாரிசெல்வராஜ்
எனக்கும் பாலா சாருக்கும் பாரதி ராஜா சாருக்கும் நிறைய அரசியல் முரண்கள் இருந்தாலும், சினிமாவுக்கு உண்மையாக இருந்தால் கூப்பிட்டு மடியில் உட்காரவைச்சுக்கிறது, ஒரு பயங்கரமான நம்பிக்கையைக் கொடுத்துச்சு. மீண்டும் அவர் கையில் பாராட்டு வாங்கணும் என்கிற வேகத்தைக் கொடுத்துச்சு.
வாழை இப்படி ஒரு வெற்றி அடைய முக்கியக் காரணம், தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் தான் என முதலில் சொல்வேன். முத்தாய்ப்பாக, அந்தப் படத்தை மக்கள்கிட்ட போய் சேர்த்தது, பாலா சாரின் கண்ணீர்.
நானும் பாலா சாரும் ஒரே வீட்டில் இருந்து தான் வந்திருக்கோம் என்பதற்கு அந்த விசுவல் தான் சாட்சி. கையைப் பிடிச்சிட்டு, இன்னும் எத்தனை கதை தான் இப்படி வைச்சிருக்கனு கேட்டார்.
அந்த விசுவலை வெளியில் விட்ட பிறகு, வாழை அடைந்த உயரம் அபரிவிதமானது. பாலு மகேந்திரா சாரின் இறுதி நாள், அவர் உடல் நலிவடைந்து இருந்தபோது, பாலா சார், என் இயக்குநர் ராம் சார், நான் எல்லாம் டீ குடிக்கப்போனோம். அப்போது, பாலா சார் கையில் இருந்து பெற்ற ஐந்து ரூபாயை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை பெருமையாக நினைக்கிறேன். நன்றி’’ என முடித்தார், மாரி செல்வராஜ்.
நன்றி: பிஹைண்ட்வுட்ஸ்
டாபிக்ஸ்