இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு திரைப்பயணம்! வெளியான வணங்கான் இசை வெளியீட்டு விழா தேதி!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவரான இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் திரைப்படம் வரும் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவரான இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் திரைப்படம் வரும் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய் உடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, சாயாதேவி, மிஸ்கின் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தின் நடித்துள்ளனர். இப்படத்தை வி ஹவுஸ் ப்ரொடக்சன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும் இப்ப படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் ஒன்றை அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரது எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் 18ஆம் தேதி அன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவரது எக்ஸ் தளப் பதிவில் கூறியதாவது,
”இயக்குநர் பாலாவின் இருபத்தைந்தாம் ஆண்டு கலைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா