வணங்கான் திரைப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜயை நடிக்க வைத்தது ஏன்? - ஓப்பனாக பேசிய இயக்குநர் பாலா!
அவர்தான் மிக மிக அர்ப்பணிப்பு மிகுந்த நடிகர் அருண் விஜய் என்று கூறினார். இதனையடுத்து நான் அருண் விஜயை நேரடியாக சந்தித்து பேசினேன் - பாலா!

வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜயை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் குறித்து இயக்குனர் பாலா கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசியிருக்கிறார்.
அதில் அவர் பேசும் பொழுது, ‘ஏ எல் விஜய் அருண் விஜய்யுடன் பணியாற்றி இருக்கிறார். அவர்தான் மிக மிக அர்ப்பணிப்பு மிகுந்த நடிகர் அருண் விஜய் என்று கூறினார். இதனையடுத்து நான் அருண் விஜயை நேரடியாக சந்தித்து பேசினேன். அவர் என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு மிக மிக பிடித்தது. அதனால் இவருடனே நாம் பணியாற்றலாம் என்று முடிவு செய்து வணங்கான் திரைப்படத்தில் அவரை நடிக்க வைத்தேன்’ என்றார்
முன்னதாக, தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. தொடர் தோல்விகள், பர்சனல் பிரச்சினைகள், நெகட்டிவான விமர்சனங்கள் என தன்னுடைய கேரியரின் மோசமான காலக்கட்டத்தில் இருக்கும் பாலா, சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் இணைந்தார். ஆனால் படப்பிடிப்பில் சில கசப்பான சம்பவங்கள் அரங்கேற, சூர்யா அந்தப்படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து அவர் அருண்விஜயை கதாநாயகனாக வைத்து வணங்கான் படத்தை எடுத்து இருக்கிறார்.