Bala: அகோரி மனித மாமிசம் உண்பதைப் பார்த்தேன்.. அகோரிகளின் நியாயம் இதுதான்.. இயக்குநர் பாலா பேட்டி
Bala: அகோரி மனித மாமிசம் உண்பதைப் பார்த்தேன்.. அகோரிகளின் நியாயம் இதுதான் என இயக்குநர் பாலா பேட்டியளித்துள்ளார்.

Bala: அகோரி மனித மாமிசம் உண்பதைப் பார்த்தேன்.. அகோரிகளின் நியாயம் இதுதான்.. இயக்குநர் பாலா பேட்டி
Bala: சமீபத்தில் இயக்குநர் பாலா, திரைத்துறையில் அறிமுகமாகி 25ஆண்டுகள் ஆன விழாவும் வணங்கான் படத்தின் விழாவும் கொண்டாடப்பட்டது.
இதில் நடிகர் சிவகுமார் இயக்குநர் பாலாவிடம் மேடையில் வைத்து மக்கள் மத்தியில் இருக்கும் பல்வேறு கேள்விகளையும் கேட்டார். அதற்கு இயக்குநர் பாலா பதில் அளித்தார். அந்தப் பேட்டி வைரல் ஆனது.அதன் தொகுப்பு இது.
கேள்வி: மயான ஊழியர், பிச்சைக்காரர், திருடர், பரதேசி.. உங்கள் படத்தில் வரும் கேரக்டர் எல்லாமே இப்படி தான் இருக்காங்க. நீங்கள் காதல் படம் எடுத்தால் கூட கடைசியில் பைத்தியம் ஆகிடுறான். அழுக்கு இல்லாமல் டீசன்ட்டான ஒரு படம் எடுக்கமாட்டீங்களா?