அவளைப் போய் எப்படி அடிப்பேன்.. பெண் பிள்ளையை யாராவது அடிப்பார்களா? .. மமிதா பைஜு சர்ச்சை.. இயக்குனர் பாலா விளக்கம்!
வணங்கான் படப்பிடிப்பில் நடிகை மமிதா பைஜுவை அடித்ததாக சொல்லப்பட்டது குறித்து இயக்குனர் பாலா விளக்கம் தந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. தொடர் தோல்விகள், பர்சனல் பிரச்சினைகள், நெகட்டிவான விமர்சனங்கள் என தன்னுடைய கேரியரின் மோசமான காலக்கட்டத்தில் இருக்கும் பாலா, சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் இணைந்தார். ஆனால் படப்பிடிப்பில் சில கசப்பான சம்பவங்கள் அரங்கேற, சூர்யா அந்தப்படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து அந்தப்படத்தில் அருண் விஜய் கமிட் செய்யப்பட்டு தற்போது படப்பிடிப்பு முடிந்தது பொங்கலுக்கு படம் வெளியாக உள்ளது.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம் வணங்கான். இந்த படத்தில் முதலில் சூர்யா, கிரித்தி ஷெட்டி, மமிதா பைஜு நடிக்க இருந்தார்கள். கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா விலகினார். அவரைத் தொடர்ந்து கிரித்தி ஷெட்டி, மமிதா பைஜு நீக்கப்பட்டனர். இதில் மமிதா பைஜு, சூர்யாவின் தங்கையாக நடிக்க இருந்தார்.
முதுகில் அடித்தார்
இந்த நிலையில் சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகை மமிதா தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டிக்கொடுத்தார். அந்த பேட்டியில், பாலா படப்பிடிப்பில் தான் கத்துவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்று சொன்னதாகவும், காட்சி ஒன்றில் சரியாக நடிக்காத போது அவர் தன்னை திட்டியதோடு, முதுகில் அடித்தார் என்றும் பேசினார். இந்தப்பேட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் பாலாவை சமூகவலைதளங்களில் கடுமையாக சாடினர்.
