Director Bala: வாய்க்கு வந்தது எல்லாம் பேசாதீங்க.. ஒரே கேள்வியால் பட விழாவில் சூடான பாலா!
Director Bala: நடிகர் விஷால் உடல்நிலை மோசமானதற்கு தான் காரணம் என வாய்க்கு வந்ததை பேசி வருவதாக இயக்குநர் பாலா கோவமடைந்தார்.

Director Bala: தமிழ் சினிமாவில் பேர் சொல்லும் இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குநர் பாலா. சேது படம் தொடங்கி வணங்கான் படம் வரை அவர் தான் திரைக்கதையாக எடுத்துக் கொண்டு பேசும் விஷயங்கள் எல்லாம் மிகவும் குரூரமானதாக இருக்கும்.
மெனக்கெடும் பாலா
சமூகத்தில் நடக்கும் அவலங்களைப் பற்றி, வெளிப்படையாக உள்ளதை உள்ளபடியே வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என பாலா மிகவும் மெனக்கெடுவார். அதன் விளைவு அவர் படங்களில் பிரதிபலிக்கும். இந்நிலையில், பாலாவின் வணங்கான் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்று பேசிய இயக்குநர் பாலாவிடம் விஷால் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
விஷால் பற்றி கேள்வி
அப்போது, விஷாலின் நடுக்கும் கைகளுக்கும் சிவந்த கண்களுக்கும், கண்களில் இருந்து வழிந்து கொண்டே இருக்கும் கண்ணீருக்கும் நீங்கள் தான் காரணம் என பலரும் கூறுகிறார்கள். அவன் இவன் படத்தில் விஷாலின் கண்களை தனியாக காட்ட வேண்டும் என்பதற்காக அவரது கண்களை வைத்து தைத்து விட்டதாக பலரும் கூறுகின்றனர். இது உண்மையா? என கேள்வி எழுப்பினர்.
அதெப்படி முடியும்
இதைக் கேட்ட இயக்குநர் பாலா, இதற்கு நான் என்ன சொல்வது? விஷாலின் உடல்நிலை எப்படி இருக்கிறது என என்னால் டாக்டர் சர்ட்டிபிகேட் தான் வாங்கித் தர முடியும். யாரோ சொல்லி இருக்காங்க அவன் இவன் படத்துல நான் விஷாலோட கண்களை எல்லாம் தைச்சுட்டேன்னு. அப்படி யாராவது பண்ண முடியும? யாருக்கு எல்லாம் என்னென்ன தோன்றுகிறதோ அதை எல்லாம் பேசுறாங்க. இதை எல்லாம் நான் பெருசா கண்டுக்க போறதில்ல என்றார் கொஞ்சம் கோவமாக.
நடுக்கத்துடன் விஷால்
முன்னதாக, மதகஜராஜா பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால், கைநடுக்கத்துடன் காணப்பட்டார். இதையடுத்து அவரது உடல் கடுமையாக நலிவுற்றதாகவும், அவன் இவன் படத்தில் அவர் மாறுகண் வைத்து நடித்ததும், அதன் காரணமாக முளைத்த கெட்ட பழக்க வழக்கங்களுமே இதற்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது.
விளக்கம் கொடுத்த விஷால்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விஷால், ‘இது 12 வருஷத்துக்கு முன்னாடி இருக்குற படம் மாதிரியே தெரியல. புதுப்படம் மாதிரி இருக்கு. எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகள். எல்லோரும் நல்லபடியா குடும்பத்துடன் சந்தேஷமா கொண்டாடுங்க.
எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல
தமிழ்நாடு மட்டுமல்ல, கனடாவில் இருந்து கூட எனக்கு போன் கால் வந்தது. நான் அப்போலோவில் அட்மிட் ஆகியிருக்கேன்னு என் உடலநிலை குறித்து தப்பான தகவல்கள் வெளிவந்தது. அப்படிலாம் ஒன்னும் இல்லை. எனக்கு கடுமையான காய்ச்சல் தான். அன்னைக்கு என்னால முடியல. ஆனாலும் இத்தனை வருஷம் கழித்து படம் வருது. சுந்தர் சி சார் முகம் பார்க்கணும், அந்த ஃபங்கஷனை மிஸ் செய்ய கூடாதுன்னு எப்படியாவது முடிஞ்ச அளவு அட்டெண்ட் செஞ்சேன்" என்றார்.
வைப் ஆன விஷால் கான்செர்ட்
நடிகர் விஷால் மதகஜராஜா படத்தில் பாடிய மை டியர் லவ்வரு பாடல் 12 வருடங்களுக்கு முன்பே பெரிய ஹிட் கொடுத்தது. அந்த வைப் இன்றும் குறையாமல் இருப்பதால், விஷால் விஜய் ஆண்டனியின் கான்செர்டில் பாட இருக்கிறார். இவர் பாட ஆரம்பித்ததும் வந்த சத்தத்தை பார்த்தவர்களுக்கு இது விஜய் ஆண்டனி கான்செர்ட்டா இல்லை விஷால் கான்செர்ட்டா என கேட்கும் அளவுக்கு சந்தேகம் வந்தது.

தொடர்புடையை செய்திகள்