புதுவித நோய்.. காப்பி பட விமர்சனத்திற்கு பதிலடி.. டாக்டரான உடன் சம்பவம் செய்த அட்லி..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  புதுவித நோய்.. காப்பி பட விமர்சனத்திற்கு பதிலடி.. டாக்டரான உடன் சம்பவம் செய்த அட்லி..

புதுவித நோய்.. காப்பி பட விமர்சனத்திற்கு பதிலடி.. டாக்டரான உடன் சம்பவம் செய்த அட்லி..

Malavica Natarajan HT Tamil
Published Jun 15, 2025 04:58 PM IST

சத்யபாமா பல்கலைகழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற பின், இயக்குநர் அட்லி அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

புதுவித நோய்.. காப்பி பட விமர்சனத்திற்கு பதிலடி.. டாக்டரான உடன் சம்பவம் செய்த அட்லி..
புதுவித நோய்.. காப்பி பட விமர்சனத்திற்கு பதிலடி.. டாக்டரான உடன் சம்பவம் செய்த அட்லி..

புதுவித நோய்

அட்லி தனது படங்கள் குறித்த விமர்சனத்திற்கு பதில் அளித்தார். அட்லி தனது படங்களில் வரும் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் காப்பியடிக்கப்பட்டவை என்று விமர்சிப்பவர்களின் கருத்துக்களைப் பற்றி பேசினார். அவர் கூறியதாவது: கொஞ்ச நாளாவே எனக்கு பொய் சொன்னா இருமல் வருது. அதுனால பொய் சொல்லாம பேச ட்ரை பண்றேன் என்றார். அதற்கு முன்னதாக. நிகழ்ச்சியில் அவர் தமிழில் பேசிய நிலையில், தமிழ் மொழி புரியாதவர்களிடம் அனுமதி கோரினார்.

என் படம் காப்பியா?

தொடர்ந்து பேசிய அவர், "பொதுவாக, நான் எடுக்கும் படங்கள் எங்கிருந்தோ எடுக்கப்பட்டவை என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இன்று எனது வாழ்க்கையைப் பற்றி சொல்கிறேன், அதனுடன் நீங்கள் தொடர்புபடுத்தக்கூடிய ஒரு உதாரணத்தையும் தருகிறேன்." என்றார். அட்லி, அல்லு அர்ஜூன் தீபிகா படுகோனுடன் இணைந்து இயக்கவுள்ள படத்தின் போஸ்டர் ட்யூன் (Dune) திரைப்படத்தை ஒத்திருப்பதாக இணையத்தில் கருத்துக்கள் எழுந்த நிலையில் அவர் இவ்வாறு கூறினார்.

நேர்மைக்கு கிடைத்த பட்டம்

2019 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் 'பிகில்' படத்தில் வரும் ராயப்பன் என்ற கதாபாத்திரத்தை உதாரணமாகக் காட்டி, "பிகில் படத்தில் வரும் ராயப்பன் கதாபாத்திரம் இந்த பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தருமான ஜெப்பியார் சாரால் ஈர்க்கப்பட்டது. இன்று, எனக்கு டாக்டர் பட்டம் கிடைத்தபோது, மெர்சல் (2017) படத்தின் பாடல்கள் இசைக்கப்பட்டன, நான் நேர்மையின் மூலமாகவும், அன்பின் மூலமாகவும் மட்டுமே இதை சம்பாதித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

இந்தியாவின் ஹை பட்ஜெட் படம்

இந்த நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவேன் என்று இன்று நான் உறுதியளிக்கிறேன்." அல்லு அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோன் உடனான அவரது வரவிருக்கும் படம் குறித்து அட்லி மேலும் கூறுகையில், "சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சார் இந்த படத்தை தயாரிக்கிறார். இது நமது நாட்டில் தயாரிக்கப்படும் மிக விலையுயர்ந்த படங்களில் ஒன்றாகும். இதை உருவாக்க நிறைய புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தப் போகிறோம். நான் பெரிய கனவு காண்கிறேன், பட்ஜெட் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர் முடிவு செய்வார்."

அல்லு அர்ஜூன் வாழ்த்து

புஷ்பா படத்திற்குப் பிறகு அர்ஜுனின் அடுத்த படம் அட்லியுடன் இருக்கும் என்று ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட பிறகு, தீபிகாவும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளதாக ஜூன் மாதம் படக்குழு அறிவித்தது. அட்லிக்கு டாக்டர் பட்டம் கிடைத்ததற்கு அர்ஜுன் சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்தார். அதில், "அட்லி அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்ததற்கு பெரிய வாழ்த்துக்கள். இந்த உயரிய மட்டத்தில் உங்கள் திறமை கொண்டாடப்படுவதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

அட்லியின் திரைப்படங்கள்

அட்லி 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார், அதன் பிறகு அவர் தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே கொடுத்துள்ளார். அவர் கடைசியாக ஷாருக் கான் மற்றும் தீபிகா நடித்த 'ஜவான்' படத்தை இயக்கியிருந்தார். இது அவரது பாலிவுட் அறிமுகமாகும். இப்படம் உலகம் முழுவதும் ரூ 1100 கோடிக்கு மேல் வசூல் செய்து ஷாருக்கின் அதிக வசூல் செய்த படமாக மாறியது.