தீபிகா மேடத்தின் கிரேஸ் அனைவரையும் அவர் பக்கம் இழுக்கும்.. பெருமைப்படும் அட்லி..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தீபிகா மேடத்தின் கிரேஸ் அனைவரையும் அவர் பக்கம் இழுக்கும்.. பெருமைப்படும் அட்லி..

தீபிகா மேடத்தின் கிரேஸ் அனைவரையும் அவர் பக்கம் இழுக்கும்.. பெருமைப்படும் அட்லி..

Malavica Natarajan HT Tamil
Published Jun 07, 2025 03:04 PM IST

அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் உருவாகும் AA22A6 திரைப்படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , தீபிகா குறித்து இயக்குநர் அட்லி பெருமையாக பேசியுள்ளார்.

தீபிகா மேடத்தின் கிரேஸ் அனைவரையும் அவர் பக்கம் இழுக்கும்.. பெருமைப்படும் அட்லி..
தீபிகா மேடத்தின் கிரேஸ் அனைவரையும் அவர் பக்கம் இழுக்கும்.. பெருமைப்படும் அட்லி..

விண்ணைத் தொடும் எதிர்பார்ப்பு

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், சென்சேஷனல் இயக்குனர் அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படம் AA22A6. பொழுதுபோக்கு துறையில் முன்னணி நிறுவனமான கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் இந்த பான் இந்திய திரைப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. அறிவிப்பு வெளியானதிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணை தொடும் அளவுக்கு உள்ளது.

அட்லியுடன் இணைந்த தீபிகா

பாலிவுட் புயல் தீபிகா படுகோனே இந்த படத்தில் இணைவது மேலும் சிறப்பம்சமாக மாறியுள்ளது. பான் இந்தியா அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் விஷுவல் வண்டர் திரைப்படமாக உருவாகவுள்ள இந்த திரைப்படம் அற்புதமான நட்சத்திர பட்டாளத்துடன் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தவுள்ளது.

இந்தப் படத்தில் தீபிகா இணையவுள்ள பிரம்மாண்ட கூட்டணியை வெளிப்படுத்தும் விதமாக தீபிகா படுகோனேவின் ஃபர்ஸ்ட் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களையும், பார்வையாளர்களையும் மெஸ்மரைஸ் செய்கிறது.

போருக்கு தயாராகும் தீபிகா

இயக்குனர் அட்லீயுடன் தீபிகா படுகோனே பேசும் காட்சிகளுடன் தொடங்கும் இந்த வீடியோ, அவர் சக்திவாய்ந்த கதாபாத்திரமாக மாறும் விதத்தை காட்டிய விதம் அனைவரிடமும் ஆர்வத்தை தூண்டுகிறது. ஹெட்கியர் அணிந்து தீபிகா படுகோனே முழு காஸ்ட்யூம்ஸுடன் செட்டுக்குள் அடியெடுத்து வைத்து போருக்கு தயாராகிறார்.

கிரேஸ் சிறப்பாக இருக்கும்

இந்த திரைப்படத்திலிருந்து தீபிகா படுகோனேவின் ஃபர்ஸ்ட் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானதை முன்னிட்டு இயக்குனர் அட்லீ கதாநாயகி குறித்து சுவாரஸ்யமான கருத்து தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிப்பது குறித்து இவ்வாறு ரியாக்ட் செய்தார்.

"ஜவான் படத்தில் தீபிகா மேடத்துடன் இணைந்து பணியாற்றினேன். அது ஒரு அற்புதமான அனுபவம். அவரது நடிப்புக்கு எல்லை, சக்தி, ஒவ்வொரு பிரேமிலும் அவர் அனைவரையும் தன் பக்கம் திருப்பும் விதமாக செய்த கிரேஸ் சிறப்பாக இருக்கும்" என்று இயக்குனர் அட்லீ தெரிவித்தார்.