Director Ashwath Marimuthu: 'நிறைய ஸ்மைல்.. கொஞ்சம் கண்ணீர்.. இது முழுக்க முழுக்க அஸ்வத் படம்..' டைரக்டர் பேட்டி
Director Ashwath Marimuthu: டிராகன் படம் நிறைய காமெடியாகவும் கொஞ்சம் கண்ணீரோடும் இருக்கும் என அஸ்வத் மாரிமுத்து இந்துஸ்தான் டைம்ஸிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Director Ashwath Marimuthu: தனது முதல் படமான ஓ மை கடவுளே வெளியாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது நல்ல நண்பரும், நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் எனும் படத்தை எடுத்துள்ளார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், காயடு லோஹர், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். பிப்ரவரி 21 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், 34 வயதான இயக்குனர் இந்துஸ்தான் டைம்ஸிடம் படம் குறித்து பேசினார்.
ரெண்டும் ஒன்று தான்
அப்போது, " டிராகன் படம் ஓ மை கடவுளே படத்திலிருந்து எவ்வளவு வித்தியாசமாக இருக்கும்? எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அஸ்வத் மாரிமுத்து, "படத்தின் மையக் கதையை பொறுத்தவரை, கதை சொல்லப்படும் விதமும், படத்தில் உள்ள உணர்ச்சிகளின் அடிப்படையிலும் பார்த்தால் இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கும்.
