தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Director Ap Nagarajan 96th Birthday Is Celebrated Today

HBD A.P.Nagarajan: நக்கீரா..சினிமாவில் திருவிளையாடல் செய்த ஏ.பி. நாகராஜன்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 24, 2024 05:00 AM IST

இயக்குநர் ஏ.பி. நாகராஜனின் 96ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ஏ.பி. நாகராஜன்
ஏ.பி. நாகராஜன்

ட்ரெண்டிங் செய்திகள்

சேலம் சங்ககிரி அருகே உள்ள அக்கம்மாபேட்டைதான் இவரது சொந்த ஊர்.

1928ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி பிறந்த அவர் இளம் வயதிலேயே நாடகங்களில் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குநராக ஆனார்.

சினிமாவில் இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்டடித்தன.

தனது ஏழாவது வயதிலேயே, டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்து, தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ் ஒலிப்பு ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.

அக்குழுவில், பல சிறப்பான வேடங்களில் நடித்தும் வந்தார். ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில், ஈடுபாடு உடையவராக இருந்தார்.

1953ஆம் ஆண்டில் இவரது நாடகம் "நால்வர்" , திரைப்படமாக்கப்பட்டபோது, அதில் திரைக்கதை, வசனம் எழுதினார். இதுவே, அவரது திரைப்பட நுழைவாக அமைந்தது. 1955ஆம் ஆண்டில் , 'நம் குழந்தை' மற்றும் 'நல்ல தங்காள்' ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

1956இல் சிவாஜி கணேசன் நடித்த, 'நான் பெற்ற செல்வம்' திரைப்படத்திற்கு, திரைக்கதை வசனம் எழுதியபோது, அதில் நடித்த சிவாஜி கணேசனுடன் அறிமுகமானார்.

'திருவிளையாடல்' படத்தில், ஏ.பி.நாகராஜன் 'புலவர் நக்கீரர்' வேடத்தில் நடித்தார். 'மாங்கல்யம்' படத்தில், திரைக்கதை வசனத்தை எழுதியதுடன் , நடிக்கவும் செய்தார்.

நடிகர் வி.கே.ராமசாமியுடன் இணைந்து, ஸ்ரீலக்ஷ்மி பிக்சர்ஸ் என்ற பெயரில் மக்களை பெற்ற மகராசி, நல்ல இடத்து சம்பந்தம் ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தார்.

புராணக் கதைகளை அடிப்படையாக வைத்து "சரஸ்வதி சபதம்", "திருவிளையாடல்", "கந்தன் கருணை", "திருமால் பெருமை" போன்ற திரைப்படங்களை இயக்கினார்.

இவர் இயக்கிய திரைப்படங்கள் 25. ஐந்து திரைப்படங்களுக்கு, கதை ஆசிரியராகவும், 3 திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அவர் சென்னையில் ஏப்ரல் 5ம் தேதி காலமானார்.

தமிழ் சினிமா வரலாற்றில் இவரது பெயரும், இவர் இயக்கிய படங்களும் என்றென்றும் நினைவில் இருக்கும்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் இவர் இயக்கிய படங்கள் பின்வருமாறு:

நவராத்திரி, சம்பூர்ண ராமாயணம், மக்களை பெற்ற மகராசி, நான் பெற்ற செல்வம், குருதட்சணை, பாவை விளக்கு, குலமகள் ராதை, விளையாட்டு பிள்ளை, வடிவுக்கு வளைகாப்பு, ராஜ ராஜ சோழன், நவராத்திரி, தில்லானா மோகனாம்பாள், திருவருட்செல்வர்.

தமிழ் சினிமாவை மற்றவர்கள் கண்டு வியக்கும் அளவிற்கு கொண்டு சென்ற இயக்குநர் ஏ.பி. நாகராஜனின் 96ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமா பிரம்மாண்டத்தின் வழிக்காட்டிக்கு நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்