Manoj Bharathiraja: மனோஜின் இறப்புக்கு காரணம் இது தான்! தம்பி ராமையா வருத்தத்துடன் பேச்சு..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Manoj Bharathiraja: மனோஜின் இறப்புக்கு காரணம் இது தான்! தம்பி ராமையா வருத்தத்துடன் பேச்சு..

Manoj Bharathiraja: மனோஜின் இறப்புக்கு காரணம் இது தான்! தம்பி ராமையா வருத்தத்துடன் பேச்சு..

Malavica Natarajan HT Tamil
Published Mar 26, 2025 11:55 AM IST

Manoj Bharathiraja: மனோஜ் பாரதிராஜாவின் இறப்புக்கு காரணம் இதுவாகத்தான் இருக்கும் என இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையா பேசியுள்ளார்.

Manoj Bharathiraja: மனோஜின் இறப்புக்கு காரணம் இது தான்! தம்பி ராமையா வருத்தத்துடன் பேச்சு..
Manoj Bharathiraja: மனோஜின் இறப்புக்கு காரணம் இது தான்! தம்பி ராமையா வருத்தத்துடன் பேச்சு..

பாரதிராஜாவுக்கு மகனா பிறந்தது தான் காரணம்

80 வயதை தாண்டிய பிறகு நிம்மதி இழந்து இருப்பது என்பது கொடுமையான செயல், எப்படி இறைவனுக்கு இப்படி எல்லாம் மனசு வருதுன்னே தெரியல. ஆன்மீகத்துல நாட்டமா இருக்கவங்களுக்கு கூட ஆண்டவன் மேல கோபம் வருது. அவர பாக்கவே முடியல.

எவ்ளோ பெரிய கலை வித்தகர். அவர் எதுவும் பேச வேண்டும். அவர பத்தி பல நூறு வருஷம் நாம எல்லாம் பாரதிராஜா பாரதிராஜான்னு பேசலாம். ஒரு மாபெரும் மனிதனுக்கு பிள்ளையா பிறந்தது மட்டும் தான் மனோஜூக்கு வந்த ஸ்ட்ரெஸிற்கான காரணம்ன்னு நான் நினைக்குறேன்.

முரளி சார் நிறைய சொல்லுவாரு

தம்பி மனோஜுக்கு 48 வயசு. முரளி சாரும் மனோஜும் படத்துல நடிச்சபோது, மனோஜ பத்தி முரளி சார் நிறைய சொல்லுவார். தம்பிக்குள்ள அவ்வளவு கனவு இருந்திருக்கு. அவ்வளவு திறமைகள் இருக்கு. அதை எப்படி வெளிய கொண்டுவர்றதுன்னு தெரியலன்னு சொல்லுவாரு. முரளி சார் 45, 46 வயசுல இறந்துட்டாரு. இந்த தம்பி 48 வயசுல இறந்திருக்கு.

இந்த தலைமுறை கத்துக்கணும்

இந்த வயசுல இன்னும் எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும். இந்த 2 பெண் பிள்ளைகளும் தந்தைய எப்படி எல்லாம் வச்சு பாக்கணும்ன்னு ஆசை பட்டிருப்பாங்க. இப்போ எல்லாம் ஒவ்வொரு நாளும் எப்படி விடியுதுன்னே யாருக்கும் தெரியல. ஒரு விஷயத்த இந்த தலைமுறை பிள்ளைங்க கத்துக்கணும். ஒரு விஷயம் நமக்கு வரலைன்னா அத தள்ளி வச்சுட்டு அடுத்த வேலைக்கு நாம போயிடனும்.

சராசரி மனிதனா இருக்க முடியல

ஒரு பெரிய மனுஷனுக்கு பிள்ளையா பிறந்துட்டாலே இப்போ என்னப்பா பண்ற, அடுத்து எதும் வேலை செய்யலயா, உங்க அப்பா மாதிரி வரணும் இல்லையா, அவரு பேர காப்பாத்தனும் இல்லையாங்குற பதற்றத்துக்கு இந்த சமுதாயம் அவங்கள ஆளாக்கி விட்டுடுது. அவர்களால ஒரு சராசரி மனிதனா ரூம்குள்ள போய் யார்கிட்டயும் பேச முடியல. வீட்டுக்குள்ள கதவை சாத்திக்கிட்டு இருக்க ஸ்ட்ரெஸ்ஸோட விளைவு தான் இந்த 48 வயதோட மரணத்திற்கு காரணம்ன்னு ஒரு தனிப்பட்ட மனிதனா கிராமத்திலிருந்து வந்ததாக சொல்கிறேன்.

கடவுள் சக்தி தரணும்

நிச்சயமா எல்லோரும் பாரதிராஜா சாரோட துயரத்தில பங்கெடுத்துப்பாங்க. அந்த பிதாமகருக்கு இந்த துயரத்த தாங்கக் கூடிய சக்திய கடவுள் கொடுக்கணும் என கூறினார்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.