GM Kumar: 25 ஆண்டுகள் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன்.. இயக்குநர் மற்றும் நடிகர் ஜி.எம்.குமார் பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gm Kumar: 25 ஆண்டுகள் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன்.. இயக்குநர் மற்றும் நடிகர் ஜி.எம்.குமார் பேட்டி

GM Kumar: 25 ஆண்டுகள் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன்.. இயக்குநர் மற்றும் நடிகர் ஜி.எம்.குமார் பேட்டி

Marimuthu M HT Tamil Published Feb 15, 2025 03:09 PM IST
Marimuthu M HT Tamil
Published Feb 15, 2025 03:09 PM IST

தன் பார்வையில் காதல் மற்றும் ரிலேஷன்ஷிப் குறித்து நடிகர் மற்றும் இயக்குநர் ஜி.எம்.குமார் பேட்டியளித்திருக்கிறார்.

GM Kumar: 25 ஆண்டுகள் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன்.. இயக்குநர் மற்றும் நடிகர் ஜி.எம்.குமார் பேட்டி
GM Kumar: 25 ஆண்டுகள் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன்.. இயக்குநர் மற்றும் நடிகர் ஜி.எம்.குமார் பேட்டி

இவர் அறுவடை நாள், பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் என்னும் பல்வேறு படங்களை இயக்கி இருக்கிறார். வெயில், அவன் இவன் ஆகியப் படங்களில் முக்கிய நடிகராக கவனம் ஈர்த்தவர்.

ரெட் நூல் யூட்யூப் சேனலில் பிப்ரவரி 14ஆம் தேதி இயக்குநர், நடிகர் ஜி.எம்.குமார் அளித்த பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யமான பதில்களை அளித்திருக்கிறார். 

அவற்றின் தொகுப்பினைக் காணலாம். அதில், ‘’

காதல் மற்றும் ரிலேஷன்ஷிப் குறித்தான ஒரு பார்வை. தற்போது நிறைய மாறியிருக்கிறது?

காதல் என்கிற கான்செப்ட்டே கிடையாது. காமத்தில் ஆரம்பிக்கிறது, அதை கவிதையாக காதல் என்று சொல்லிட்டாங்க. காமம் என்பது கெட்ட வார்த்தை. கண், காது, மூக்கு எதுவும் கெட்ட வார்த்தை கிடையாது. நமது அந்தரங்க உறுப்புகள் அனைத்தையும் கெட்ட வார்த்தை ஆக்கிட்டாங்க. அதனால் எனக்கு காதலில் நம்பிக்கை கிடையாது. காமம் இருக்குன்னு நம்புறேன். காமத்துடன் கூடிய நட்பு வெகு ஆண்டுகளுக்கும் மேல் ஒரு துணையுடன் இருந்தால் அதை காதல் எனச்சொல்கிறார்களா எனத் தெரியாது. நான் 25 ஆண்டுகளாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன். ஆனால், அது கடைசி வரை இல்லாமல்போய்விட்டது. அதற்குக் காரணம், சலிப்பு தான். காதல் திருமணம் என்பது ஒரு சமூக அமைப்புக்காகவே தவிர, இது மனிதர்களுக்கிடையிலானது இல்லை. ஒரு சாதியில் குழந்தைபெற்றுக்கொள்வது போன்ற முட்டாள்த்தனம் வேறு இல்லை.

பிறக்கும்போதே, இது தலித் குரங்கு, இது தேவர் குரங்குன்னு இருந்துச்சா?: ஜி.எம். குமார்!

45 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனித இனம் மேம்பட்டு வருகிறது என வைத்துக்கொள்வோம். அப்போது ஆப்ரிக்காவில் இருந்து எல்லோரும் பிரிந்து போறாங்க. பிறக்கும்போதே, இது தலித் குரங்கு, இது தேவர் குரங்கு, இது நாடார் குரங்கு, இது பிள்ளை குரங்கு என போட்டுட்டோம் என்றால், ஸ்ரீலங்கா வழியாக தமிழ்நாட்டிற்குள் வந்துவிட்டார்களா? அப்படியே இருக்கட்டும்.

இப்போது சொந்தத்தில் திருமணம் முடித்தாலே, குழந்தை ஊனமே பிறக்கிறது. இப்படி இருக்கும்போது 45 லட்சம் ஆண்டுகளுக்கு முன், சாதியை எப்படி பராமரித்து இருக்க முடியும். எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்.

தமிழ்பேசக்கூடிய நிலப்பரப்பில் தமிழர்கள் இருந்ததால் தமிழ்பேசிறாங்க. இதில் தமிழ் பேசிறவங்க மட்டும் இருந்திருக்க முடியாது.

மதம் என்பது 7ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் வந்தது. மனிதக் குரங்குகள் எல்லாம் எந்த மதத்தை பின்பற்றியது. அப்படியில்லை. அதில் காதலுக்கு முக்கியத்துவம் தராமலேயே கல்யாணம் நடக்கிறது.

காதல் என்பதே இப்போது ஒரு ஃபீலிங் என்று சொல்றீங்க? உங்களுக்குப் பிடித்த நபரோடு தாம்பத்திய உறவு கொள்ளாமல், பிறர் சொல்லும் நபரோடு தாம்பத்திய உறவு கொள்வது என்பது எப்படி சாத்தியம். இவன் கூட தான், ஒரு தாம்பத்திய உறவு இருக்கணும் என்பது எவ்வளவு பெரிய காமெடி.

அப்படி தானே நாட்டில் கட்டமைக்கப்பட்டிருக்கு?

அது ஒரு ஊழல். ஒருவரின் வாழ்க்கையில் தூண்டப்பட்ட ஒரு ஊழல் எனலாம். அதனால், எப்படி சாதி இருக்கும். இவன் தமிழன், இவன் தெலுங்கன், இவன் மலையாளின்னு எப்படி சொல்லமுடியும். எல்லோருமே இங்கு அசல் கிடையாது. கி.பி.2000த்துக்கு முன் ரோமானியர்கள் பாண்டிச்சேரியில் இருந்து கொச்சின் வரை போயிருக்காங்க, விஜயநகரப் பேரரசு இருக்காங்க. கலிங்கப்பேரரசு இருக்காங்க. அதில் எத்தனை பேர் காதலிச்சு கல்யாணம் பண்ணியிருக்காங்கன்னு தெரியாது. அதனால் எல்லாம் மிக்ஸ் ஆகியிருக்கும். அப்படி ஒரு சாதிக்குள் கல்யாணம் செய்திருந்தால் வீரியமான ஜீனுடன் இருந்திருக்கமாட்டோம். நான் ரிலேஷன்ஷிப்பை நம்புகிறேன். திருமணத்தை நம்பவில்லை'' எனப் பேசியிருக்கிறார், ஜி.எம். குமார்.

நன்றி: ரெட் நூல் யூட்யூப்

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர். முதுகலை கட்டுமானப்பொறியியல் துறையில் பட்டம்பெற்றவர். விகடனில் 2014-15க்கான தலைசிறந்த மாணவப் பத்திரிகையாளர் விருது பெற்றவர். 11ஆண்டுகளுக்கும் மேலாக அச்சு,காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் அனுபவம் கொண்டவர். தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக பள்ளியில் படிக்கும்போதே கையெழுத்துப் பிரதியில் ஆரம்பித்த இவரது ஊடகப்பயணம், தாலுகா நிருபர், விகடன், மின்னம்பலம், காவேரி நியூஸ் டிவி, நியூஸ் ஜெ டிவி, ஈடிவி பாரத் தமிழ்நாடு வரை பயணிக்கச் செய்து, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் இவரை சேர்த்துள்ளது. அனைத்து துறை சார்ந்த கட்டுரைகளையும் எழுதக்கூடியவர். சினிமாவில் இயக்கம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவது, சிறுகதை எழுதுவது மிகப்பிடித்தமான பணிகள்!
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.