Director Ameer: காலையில் பூஜை.. மாலையில் ட்ராப்.. சேதுவாக மாறியிருக்க வேண்டிய அஜித்.. பாலா பரசுராமனான கதை!
Director Ameer: ஒன்று புரிந்து கொள்ளுங்கள். ஒரு இயக்குநர் உருவாகிறார் என்றால், அது அவருக்கானது மட்டுமல்ல. அவர் ஒரு தலைமுறையையே உருவாக்குகிறார்.
Director Ameer: யோலோ திரைப்படத்தின் தொடக்க விழா நிகழ்வு சென்னை பிரசாத் ஸ்டியோவில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர், “ 1988 - 89 காலகட்டங்களில், இயக்குநர் பாலாவும் நானும் சென்னை வந்தோம். அவர் பாலு மகேந்தராவிடம், உதவி இயக்குநராக இணைந்து வேலை செய்தார். 1993 ஆம் ஆண்டு பாலா, இயக்குநராக ஒரு படத்தில் கமிட் ஆகி, அந்த படத்திற்கு பூஜை போடப்பட்டது. அந்தப் படத்திற்கு பெயர் அகிலன்.
மாலையே நின்ற திரைப்படம்
இந்திய சினிமா வரலாற்றிலேயே, காலையில் பூஜை போட்டு மாலையில் டிராப் செய்யப்பட்ட படம் அந்த திரைப்படம் தான். அப்படிப்பட்ட ஒரு வரலாறு அந்த படத்திற்கு இருக்கிறது. பாலா என்பவர் யார் என்றால், பாலு மகேந்திரா என்ற மரத்திலிருந்து பறிக்கப்பட்ட பழம். ஆனால், அந்த பழம் அன்றைக்கு விதைக்கப்பட்டது. ஆனால் முளைக்கவில்லை. அந்த காலகட்டத்தில், ரஜினிகாந்த் கமல்ஹாசனை தவிர மீதி இருந்த எல்லா கதாநாயகர்களும், அந்த படத்திற்குள் வந்து, வந்து சென்று கொண்டு இருப்பார்கள். அவர்களை தவிரவும், பல தயாரிப்பாளர்கள், பல ஹீரோக்களை சந்தித்து, அந்த கதையை படமாக்குதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தோம்.
ஒரு கட்டத்தில், அந்தப் படத்தில் அஜித் குமாரும் கமிட்டாகி இருந்தார். ஆனால், அவராலும் அந்த படத்தில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நடிகர் சசிகுமாரின் சொந்தக்காரரான கந்தசாமி என்பவர் தயாரிப்பாளராக மாற, விக்ரம் அந்த படத்தின் கதாநாயகனாக மாறினார். அந்த படத்தின் பூஜை பிரசாத் ஸ்டுடியோவில். அன்று மாலையே படைப்பாளிகள் ஸ்டிரைக் அறிவித்து விட்டனர். இதனால், அப்போதும் அந்த படம் ட்ராப் ஆகிவிட்டது.
நம்பிக்கை ஒன்று கையில் இருந்த விஷயம்
அதன் பின்னர் அந்த படம் காலம் தாழ்ந்து தொடங்கப்பட்டது. அந்த படத்தை குறித்த பட்ஜெட்டில் எடுக்க முடியவில்லை, ஆகையால், பின்னால் அதிலும் காலதாமதம் ஆகி, ஒரு வழியாக, 2000 ஆம் ஆண்டு தான் அந்த படம் முடிவுக்கே வந்தது. சரி முடிவுக்கு வந்துவிட்டது. அந்த படம் விற்பனைக்கு ஆனதா என்றால், யாருமே அதை வாங்கவே இல்லை.
நாங்கள் அதை வைத்து ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது, அங்கு பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் வருவார்கள். நாங்கள் அவர்களை அப்படியே பார்த்துக் கொண்டிருப்போம். எங்களிடம் இருந்த ஒரே நம்பிக்கை என்னவென்றால், எங்கள் படமும் நிச்சயமாக ஒரு நாள் வரும் என்பதுதான். காரணம், பார்த்த அனைவரும் படத்தை நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள்.
ஒன்று புரிந்து கொள்ளுங்கள். ஒரு இயக்குநர் உருவாகிறார் என்றால், அது அவருக்கானது மட்டுமல்ல அவர் ஒரு தலைமுறையையே உருவாக்குகிறார். பாலாவிடம் இருந்துதான் நான் வந்தேன். சூர்யா உருவானார். விக்ரம் என்ற மிகப்பெரிய நடிகரை அவர் உருவாக்கினார்” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்