தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Director Ameer Latest Interview About Jayalalitha Meet Up

Director Ameer: ஜெயலலிதாவை பார்க்க மஞ்சள் சால்வை.. 2 முறை இடித்த அமீர்.. பதறிய ஐஏஎஸ் அதிகாரிகள்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 11, 2024 12:00 AM IST

டிவியில் பார்த்த அவர், தலைமை கழகம் விரைந்தார். அங்கு அவரை சந்திப்பதற்கான நேரம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு என்னை அறியாமல் மஞ்சள் சால்வையை எடுத்து சென்று விட்டேன். இ

இயக்குநர் அமீர்!
இயக்குநர் அமீர்!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “ஜெயலலிதாவை நேரடியாக சந்திக்க கூடிய வாய்ப்பானது எனக்கு இரண்டு முறை அமைந்தது. நான் அப்போது ஃபெப்சி தலைவராக இருந்தேன். சிவக்குமார், சரத்குமார் உள்ளிட்ட பலர் அன்று வந்திருந்தார்கள்.  அந்த சந்திப்பில் அவர் என்னை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. 

இரண்டாவது முறை அவரை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தது. அந்த சமயத்தில் ஜெயலலிதாவுடைய உதவியாளராக இருந்த பூங்குன்றன் எனக்கு போன் செய்து அம்மா உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து விட்டார் என்று சொன்னார். 

இந்த நிலையில் நான் பேரணியாக சென்று ஜெயலலிதாவை சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். நாங்கள் நடத்திய பேரணியை ஜெயலலிதா டிவியில் பார்த்து தலைமை கழகம் விரைந்தார். அங்கு அவரை சந்திப்பதற்கான நேரம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு என்னை அறியாமல் மஞ்சள் சால்வையை எடுத்து சென்று விட்டேன்.  இதனையடுத்து உதவியாளர் அதனை மாற்றினார். 

ஜெயலலிதா எங்களிடம் பேசுவதற்கு பத்து நிமிடங்கள் வரையில்தான் நேரம் ஒதுக்கி இருந்தார். ஆனால் எங்களுடன் பேச பேச அந்த நேரம் நீண்டது. ஒரு கட்டத்தில் ஜெயலலிதா என்னை தம்பி என்று அழைத்தார். 

பேச்சு வாக்கில் நான் அவரை இடைமறித்து வேறு பேசி விட்டேன். இந்த சந்திப்பு கிட்டத்தட்ட  45 நிமிடங்கள் வரை நடந்தது. நன்றாக இருந்தது. அதன் பின்னர் அதிகாரி ஒருவர் என்னை சந்தித்தார். அவர் ஜெயா அம்மாவை எதிர்த்து பேசியது,  போட்டோ எடுக்கும் போது அவரை நான் இடித்தது உள்ளிட்ட பல விஷயங்களை சுட்டிக்காட்டினார்” என்று பேசினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.