Thalapathy Vijay: சீறி வந்த ரஜினி.. தானாக இறங்கிய விஜய் துண்டு.. பற்றி எறிந்த படப்பிடிப்பு.. பகவதியை பதற வைத்த பாபா!
Thalapathy Vijay: “யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், ரஜினி சார் எங்களது படப்பிடிப்பிற்குள் வந்து விட்டார். நேராக விஜய் நோக்கி வந்தவர், விஜய் நீங்கள் இருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்” - பகவதியை பதற வைத்த பாபா
Thalapathy Vijay: பகவதி படத்தில் நடந்த சுவாரசியமான அனுபவத்தை, அந்தப்படத்தின் இயக்குநர் வெங்கடேஷ் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
ரஜினி நடிக்க வேண்டிய கதையில் விஜய்
அதில் அவர் பேசும் போது, “பகவதி படத்தின் கதையை நான் விஜய் சாரிடம் சொன்னபோது, அவர் இந்த கதையானது ரஜினி சார் நடிக்க வேண்டிய கதையாகும். இதில் நான் நடித்தால், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்டார். இதையடுத்து நான், விஜய் சாரை மிகவும் கேட்டுக் கொண்டு, சமாளித்து அந்த கதையில் நடிக்க வைத்தேன்.
பகவதி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது அதன் அருகில் பாபா படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் என்னிடம் வந்த விஜய், நான் ரஜினி சாரை பார்த்துவிட்டு வந்து விடவா என்று கேட்டார். இந்த நிலையில் நான் அடுத்ததாக எனக்கு ஷிப்ட்டிங் இருக்கிறது அதனால், இந்த ஷாட்டை மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு, நீங்கள் சென்று விடுங்கள் என்று கூறினேன். அவரும் ஓகே அண்ணா என்று கூறினார்.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், ரஜினி சார் எங்களது படப்பிடிப்பிற்குள் வந்து விட்டார். நேராக விஜய் நோக்கி வந்தவர், விஜய் நீங்கள் இருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன் அதனால்தான் உடனே உங்களை பார்க்க வந்தேன் என்று சொன்னார்.
விஜய் சார் அப்பொழுது தோளில் துண்டை போட்டிருந்தார். ரஜினி சார் வருவதைப் பார்த்த அடுத்த நொடியே, தோளிலிருந்து துண்டை எடுத்து கையில் வைத்துக் கொண்டார். இந்த நிலையில் முன்னதாக ரஜினிதான் இந்த கதைக்கு சரியானவர் என்று அவர் சொன்னதை குறிப்பிட்டு, பாருங்கள் சார்…அவர் படப்பிடிப்பிற்கே வந்து விட்டார் என்று கிண்டலடித்தார். இந்த நிலையில் நான் பாருங்கள் சார் இந்த படத்தை பார்த்துவிட்டு ரஜினி சார் உங்களை அழைத்து பாராட்டுவார் என்று கூறினேன். அதன் படியே நடந்தது.” என்று பேசினார்.
நடிகர் விஜயின் அவரது அப்பாவான எஸ்.ஏ. சந்திரசேகரும், அம்மா ஷோபாவும் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்தனர். அப்போது விஜய்க்கும் அவரது தங்கை வித்யாவிற்கும் இடையே இருந்த பிணைப்பு குறித்து பேசினர்.
அதிர்ஷ்ட குழந்தை
இது குறித்து அவர் பேசும் போது, “நான் அப்போது அசிஸ்டண்ட் டைரக்டர், ஷோபா மேடைப் பாடகி. எங்களுடைய வாழ்க்கை அன்று அப்படித்தான் இருந்தது. எக்மோர் அரசு மருத்துவமனையில்தான் விஜய் பிறந்தார். அவர் பிறக்கும் போது, அவர் இவ்வளவு அதிஷ்டமான குழந்தையாக இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. அவருக்கும் அவரது தங்கைக்குமான உறவு அப்படி இருந்தது. பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் விஜய், அழுக்குத்துணி வைக்கும் கூடையில் வித்யாவை தூக்கி வைத்து விளையாடுவார். நாங்கள் கீழே விழுந்து விடுவாள் என்று பதறுவோம். ஒரு முறை கீழே கூட விழுந்தது என்று நினைக்கிறேன்.
அப்போது கூட அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை. விஜய் போன்ற குழந்தையை எனக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி. விஜயை நினைத்து, நினைத்து தினம் தினம் பெருமை படுகிறோம். 1991ம் ஆண்டு, அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் நான் வேறு விதமாக நினைத்திருந்தேன். ஆம் , நான் விஜயை ஒரு டாக்டராக மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். காரணம் என்னவென்றால், விஜயின் தங்கை வித்யா லுகேமியாவால் இறந்தாள்.
டாக்டராக்க ஆசைப்பட்டேன்
ஆகையால் அதில், விஜயை சிறப்பு வாய்ந்த டாக்டராக மாற்றி, பெரிய மருத்துவமனை கட்ட வேண்டும் என்று நினைத்தேன். காரணம், வித்யா எங்களை விட்டுச் சென்ற போது அவளுக்கு வெறும் 3 1/2 வயது. அந்த மாதிரியான இழப்பு யாருக்கும் வந்து விடக்கூடாது என்றுதான் அப்படி நினைத்தேன். ஆனால் விஜய் நான் நடித்தே தீருவேன் என்று பிடிவாதமாக நின்றார். ஒரு முறை முடிவெடுத்துவிட்டால், தன்னுடைய பேச்சை தானே கேட்கமாட்டேன் என்று அவர் கூறுவது, அன்றே அவருக்கு இருந்த பிடிவாத குணமாகும்.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்