தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dinesh: அடுத்த வாழ்க்கைக்கு தயார்.. ர‌ச்சிதா செயலால் மனம் உடைந்து போன தினேஷ்

Dinesh: அடுத்த வாழ்க்கைக்கு தயார்.. ர‌ச்சிதா செயலால் மனம் உடைந்து போன தினேஷ்

Aarthi Balaji HT Tamil
Jan 20, 2024 09:12 AM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தினேஷ் முதல் முறையாக பேட்டி அளித்து உள்ளார்.

தினேஷ் -  ரச்சிதா
தினேஷ் - ரச்சிதா

ட்ரெண்டிங் செய்திகள்

நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பும் சரி, சென்ற பிறகு சரி மீண்டும் ரச்சிதாவுடன் இணைய விரும்புவதாக பேசினார். அத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வென்று தினேஷ் கப்பை வென்று ரச்சிதாவின் கையில் கொடுக்க வேண்டும் என்று சொல்லி வந்தார். அதனால் தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என பேசினார்.

ஆனால் ரச்சிதாவிற்கு அவருடன் இணைந்து வாழ விருப்பம் இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினேஷ் கலந்து கொண்ட பிறகு அவர் தொடர்பாக எதிர்மறையான கருத்துகளை பேசி கொண்டே இருந்தார். அது மட்டுமில்லாமல் அவருக்கு எதிராக செயல்பட்ட விசித்ராவிற்கு ஆதரவு தெரிவித்தார்.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தினேஷ் முதல் முறையாக பேட்டி அளித்து உள்ளார். அதில், ”நான் உள்ளே போகும் போது எப்படியாவது என்னுடைய வாழ்க்கை சரியாக விடும் என்ற நம்பிக்கையில் தான் சென்று இருந்தேன்.

டைட்டில் வென்று என்னுடைய வாழ்க்கையை மீண்டும் தொடரலாம் என நான் ஆசையோடு உள்ளே போனேன். ஆனால் வெளியே வந்து பார்த்தால் எந்த இடத்தில் இருந்ததோ அந்த மாதிரி தான் இருக்கிறது.

இதற்கும் மேலும் ரச்சிதா மனம் மாறுவார் என சொல்ல முடியவில்லை. ரச்சிதா ஒரு சுவற்றை எழுப்பி அந்த சுவற்றுக்குள்ளே இருந்து கொண்டு இருக்கிறார். அது என்னால் உடைக்க முடியாத வகையில் வலுவாக இருக்கிறது. 

இதற்கும் மேலே இனி நான் அடுத்த வாழ்க்கையை நோக்கி பயணத்தை தொடர போகிறேன் “ என மனம் உடைந்து பேசினார். 

இதை பார்த்த தினேஷின் ரசிகர்கள், நீங்கள் எடுத்திருக்க முடிவு சரியானது. இனிமேல் உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள். உங்களை வேண்டாம் என நினைப்பவர்களை நினைத்து கூட பார்க்க வேண்டாம் என அறிவுரை கூறி வருகிறார்கள்.

கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக கணவன், மனைவியாக ரச்சிதாவும் இவரும் வாழ்ந்து வந்த நிலையில், இரண்டு வருடங்களாக இவர்கள் பிரிந்து வாழ்ந்தார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். 

டி20 உலகக் கோப்பை 2024