Cynthiya Lourde: 'ட்ரோல் பிடிச்சிருக்கு.. பாசிட்டிவ்வோ நெகட்டிவ்வோ நான் ரிஜிஸ்டர் ஆகணும்.. அது போதும்’- சிந்தியா லூர்தே
Cynthiya Lourde: என்னைப் பத்தி பாசிட்டிவ்வாகவோ, நெகட்டிவ்வாகவோ பேசினாலும் எனக்கு பிரச்சனை இல்லை. நான் மக்கள் மனதில் ரிஜிஸ்டர் ஆக வேண்டும் என நடிகையும் தயாரிப்பாளகுமான சிந்தியா லூர்தே கூறியுள்ளார்.

Cynthiya Lourde: தினசரி படத்தின் கதாநாயகியும் தயாரிப்பாளருமான சிந்தியா லூர்தே தன் மீது தொடர்ந்து வைக்கப்படும் அவதூறு கருத்துகளுக்கும் ட்ரோல்களுக்கும் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனல் வழியாக பதிலடி கொடுத்துள்ளார்.
நான் அமெரிக்கா பொன்னு
"நான் கலிஃபோர்னியாவிலுள்ள சான் பிரான்சிஸ்கோ தான் என் சொந்த ஊர். எனக்கு பாட்டு பாடுறது ரொம்ப பிடிக்கும். அதனால நான் தமிழ்ல பாட்டு பாடணும்ன்னு ஆசப்பட்டேன். அதனால தான் அமெரிக்காவுல இருந்து இங்க வந்தேன்.
நான் ப்ரொபஷனல் சிங்கர் கிடையாது. என்னால ஸ்பானிஷ், இங்கிலிஷ்ல பாட்டு பாட முடியும். தமிழ்ல நான் பாட ஆசப்பட்டேன். அதுக்காக ஒரு மியூசிக் டேரக்டர பாத்தேன். அப்போ அவர் சொன்னத வச்சி, நான் ஒரு படமே எடுக்க முன்வந்தேன். ஒரு பாட்டுக்காக படமே எடுக்க துணிஞ்சிட்டேன்.
நெனச்சா பண்ணுவேன்
நான் ஒன்னு நெனச்சேன்னா அத பண்ணுவேன். அது எப்படி இருந்தாலும் எனக்காக நான் பண்ணுவேன். அதுனால தான் இளையராஜா சார் என்னோட 2வது படத்துக்கு மியூசிக் டைரக்டரா ஆனாரு. ஆனா, இங்க நான் ட்ராக் தான் பாடுனேன். ஒரிஜினலா பாடுற டைம்ல என்னால இங்க இருக்க முடியல. அதுனால அந்தப் பாட்ட பவதாரணி பாடுனாங்க. இதுதான் அவங்க கடைசியா பாடுன பாட்டு.
நான் ஒரு பாடகியாகிட்டன்னா என்னால தொடர்ந்து அதே வேளைய பண்ண முடியாது. ஆனா, ஒரு நடிகையா இருந்தா எல்லாமே பண்ண முடியும். அதுனால தான் நான் நடிக்க வந்தேன்.
நான் ரிஜிஸ்டர் ஆகுறேன்
என்னப் பத்தி நெறைய பேட் கமெண்ட் எள்லாம் சோசியல் மீடியாவுல வரும். அத பாக்கும் போது ஒரு சாதரண மனுஷியா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனா ஒரு 4 நாளுல நான் வழக்கம் போல சாதாரணமா ஆகிடுவேன்.
நான் இந்தப் படத்துக்கு நெறைய காசு போட்டுருக்கேன். நான் போய் இதுக்காகவே மக்கள் மனசுல ரிஜிஸ்டர் ஆகணும். அது நல்ல விதமாவோ இல்ல கெட்ட விதமாவோ நான் ரிஜிஸ்டர் ஆகுறேன். அதுதான் எனக்கு முக்கியம். நான் நடிச்சதுனால தான் தினசரி படம் மக்களுக்கு தெரிஞ்சிருக்கு. நான் ட்ரோல் பண்றது மூலமா ரிஜிஸ்டர் ஆகுறேன்னா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.
தப்புன்னு ஃபீல் பண்ணுவாங்க
எவ்ளோ பேர் என்ன ட்ரோல் பண்ணுனாலும், என்ன சப்போர்ட் பண்றவங்களும் இருக்கத் தான் செய்றாங்க. எனக்காக சண்டை எல்லாம் போடுறாங்க. அதப் பாக்குறப்போ எனக்கு அது பிடிச்சிருக்கு.
என்ன ஒரே ஒரு பாட்ட வச்சி மட்டும் ஜட்ஜ் பண்ண முடியாது. அந்தப் படம் வந்ததுக்கு அப்புறம் தான் தெரியும். படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் என்ன ட்ரோல் பண்ணவங்க எல்லாம் அது தப்புன்னு ஃபீல் பண்ணுவாங்க.
அந்தப் பாட்டு ஷூட் பண்ணும் போது ஸ்ரீகாந்த் சார் எமெர்ஜென்சின்னு சொல்லி கிளம்பிட்டாரு. அதுனால 2 நாள்ல அவசர அவசரமா ஷூட் பண்ணோம். நல்லவேள அந்தப் பாட்டு அப்படி வந்ததுனால தான் இவ்ளோ பெரிய ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு.
இந்தப் படத்துல நடிச்சவங்க எல்லாம் நடிச்சு முடிச்சிட்டு போயிடுவாங்க. எந்த ட்ரோலும் அவங்கள ஒன்னும் பண்ணாது. நான் இந்த ட்ரோலுக்காக அப்படியே உக்கார முடியாது. ஏன்னா நான் தான் அந்தப் படத்தோட புரொடியூசர். நான் அடுத்து நடக்கப்போற வேலைய பாக்கனும்" என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்