ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரம்.. ‘என் சகோதரர் மேல் சந்தேகம் இருக்கு.. ஆனாலும்’ - மொத்தமாக போட்டு உடைத்த விஷ்ணு மஞ்சு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரம்.. ‘என் சகோதரர் மேல் சந்தேகம் இருக்கு.. ஆனாலும்’ - மொத்தமாக போட்டு உடைத்த விஷ்ணு மஞ்சு!

ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரம்.. ‘என் சகோதரர் மேல் சந்தேகம் இருக்கு.. ஆனாலும்’ - மொத்தமாக போட்டு உடைத்த விஷ்ணு மஞ்சு!

Kalyani Pandiyan S HT Tamil
Published May 31, 2025 04:09 PM IST

கண்ணப்பாவை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷ்ணு மஞ்சு, ஹார்டு டிஸ்க்கை திருடிய ரகு மற்றும் சரிதா ஆகியோர் மனோஜின் ஊழியர்கள் என்று குற்றம் சாட்டினார்.

ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரம்.. ‘என் சகோதரர் மேல் சந்தேகம் இருக்கு.. ஆனாலும்’ - மொத்தமாக போட்டு உடைத்த விஷ்ணு மஞ்சு!
ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரம்.. ‘என் சகோதரர் மேல் சந்தேகம் இருக்கு.. ஆனாலும்’ - மொத்தமாக போட்டு உடைத்த விஷ்ணு மஞ்சு!

கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் குறித்து விஷ்ணு மஞ்சு

சென்னையில் வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்த விஷ்ணு, ‘ஹார்டு டிஸ்க்கை திருடியதாகக் கூறப்படும் ரகு மற்றும் சரிதா ஆகியோர் என் சகோதரர் மனோஜின் ஊழியர்களின் ஒரு பகுதியாக இருக்கின்றனர். குற்றவாளிகள் காட்சிகளை கசிய விட்டால், கசிந்த காட்சிகளை யாரும் பார்க்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

மும்பையில் இருந்து எங்கள் தந்தையின் பிலிம் நகர் இல்லத்திற்கு அனுப்பப்பட்ட 70 நிமிட காட்சிகள் கடந்த 1 மாதத்திற்கு முன்னதாக ரகுவால் திருடப்பட்டன. ரகுவை என் சகோதரர் மஞ்சு மனோஜ் வேலைக்கு அமர்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன்.

ஆனால், அவர் சொல்லிதான் ரகு ஹார்ட் டிஸ்க்கை திருடினாரா என்பது எனக்குத் தெரியவில்லை’ என்று கூறினார். மேலும் பேசிய அவர், ‘ஹார்ட் டிஸ்க் மிகவும் வலுவான பாஸ்வேர்டால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதனை உடைப்பது மிகவும் கடினம்’ என்று கூறினார்.

ஹார்ட் டிஸ்க் திருடியது தொடர்பாக வழக்கு

கண்ணப்பா: தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘கண்ணப்பா’. மிகவும் பிரபலமான மகாபாரத தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார்.

கண்ணப்பாவின் கதை!

சிவனின் தீவிர பக்தரான கண்ணப்பரை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் முக்கியமான கண்ணப்பர் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் படத்தின் கதை மற்றும் திரைக்கதையையும் எழுதி இருக்கிறார்.

ஜூலை 27ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் ஹார்டு டிஸ்க் திடீரென்று காணாமல் போனது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் இவருடன் மோகன்லால், காஜல் அகர்வால், அக்‌ஷய் குமார், பிரீத்தி முகுந்தன், பிரபாஸ், மோகன் பாபு, சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.