தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Allu Arjun: தேர்தல் நடத்தை விதிகளை மீறினாரா அல்லு அர்ஜூன்? - பாய்ந்தது வழக்கு - பின்னணி என்ன?

Allu Arjun: தேர்தல் நடத்தை விதிகளை மீறினாரா அல்லு அர்ஜூன்? - பாய்ந்தது வழக்கு - பின்னணி என்ன?

Marimuthu M HT Tamil
May 12, 2024 04:27 PM IST

Allu Arjun: அல்லு அர்ஜுன் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ரவி சந்திர கிஷோர் ரெட்டி ஆகியோர் மீது, இல்லத்தில் ஒரு பெரிய பொதுக் கூட்டத்தை அனுமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறினாரா அல்லு அர்ஜூன்? - பாய்ந்தது வழக்கு - பின்னணி என்ன?
தேர்தல் நடத்தை விதிகளை மீறினாரா அல்லு அர்ஜூன்? - பாய்ந்தது வழக்கு - பின்னணி என்ன? (Instagram)

ட்ரெண்டிங் செய்திகள்

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏ ரவி சந்திர கிஷோர் ரெட்டி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆந்திராவில் அல்லு அர்ஜுன் மீது வழக்கு

நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் ஷில்பா ரவி சந்திரகிஷோர் ரெட்டி ஆகியோர் நேற்று(மே 11) ரெட்டியின், இல்லத்தில் ஒரு பெரிய பொதுக்கூட்டத்திற்கு அனுமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் ஆந்திர சட்டசபைத் தேர்தலில் நடத்தை விதிமீறல் நடந்துள்ளது. இந்த மாநிலத்தில் நாளை மே 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

விழாவில் கலந்துகொள்ள முன்அனுமதியின்றி, நடிகர் அல்லு அர்ஜூனுக்கு, எம்.எல்.ஏ ஷில்பா ரவி சந்திரகிஷோர் ரெட்டி அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. ஆந்திராவில் விதிக்கப்பட்டுள்ள 144ஆவது பிரிவை மீறியதற்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. நந்தியாலா கிராமப்புறத்தைச் சேர்ந்த துணை தாசில்தார் பி.ராமச்சந்திர ராவ் வழக்குப்பதிவு செய்தார்.

அல்லு அர்ஜுன் ஏன் நந்தியாலாவுக்குச் சென்றார் தெரியுமா?

மே 11ஆம் தேதி, ஷில்பா ரவி சந்திரகிஷோர் ரெட்டியை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு, அல்லு அர்ஜுன் தான் ஏன் நந்தியாலாவுக்குச் சென்றேன் என்பதைப் பகிர்ந்து கொண்டார். அதில், "நான் தனியாக இங்கு வந்தேன். என் நண்பர்களில், அவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும், அவர்களுக்கு என் உதவி தேவைப்பட்டால் நான் முன்வந்து உதவுவேன். அதற்காக நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கிறேன் என்றோ, ஆதரிக்கவில்லை என்றோ அர்த்தமில்லை’’ என்றார்.

நந்தியாலாவில் அல்லு அர்ஜுன்:

இதுதொடர்பாக வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா, நந்தியாலாவில் ரசிகர்கள் வெள்ளத்தில் அல்லு அர்ஜூனை வரவேற்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவர் ரசிகர்களை கைகூப்பி வரவேற்று, அவர்களை நோக்கி கையசைத்து புன்னகைத்தார். அவருடன் அவரது மனைவி சினேகா ரெட்டியும் நின்று கொண்டிருந்தார். 

இதுதொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன், ஷில்பா ரவி சந்திர கிஷோர் ரெட்டியை டேக் செய்து தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, "நந்தியாலாவில் மக்கள் அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றி. விருந்தோம்பலுக்கு நன்றி. ஷில்பா ரவி ரெட்டி அவர்களே. தேர்தலுக்கும் அதற்கு அப்பாலும் உங்களுக்கு நல்வாழ்த்துகள். உங்களுக்கு எனது அசைக்க முடியாத அன்பும் ஆதரவும் உண்டு’’என்றார். 

இதுகுறித்து ஷில்பா ரவி ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், "நந்தியாலுக்கு பயணம் செய்து எனது தேர்தலில் எனக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர் அல்லு அர்ஜுன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. உங்கள் அசைக்க முடியாத ஆதரவு எனக்கு எல்லாவற்றையும் தருகிறது. நம் நட்புக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்’’ எனத் தெரிவித்துள்ளார். 

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் 'புஷ்பா: தி ரூல்' படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுடன், ஃபஹத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா, தனஞ்சய், ராவ் ரமேஷ் உள்ளிட்டப் பலர் நடித்து வருகின்றனர். இது புஷ்பா: தி ரைஸ் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இப்படம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்