Top Cinema News: நடிகை வீட்டில் வைர நகை திருட்டு.. மீண்டும் கார் பந்தயத்தில் அஜித் - இன்றைய டாப் சினிமா செய்திகள்
Top Cinema News Today: நடிகை வீட்டில் வைர நகை திருட்டு, மீண்டும் கார் பந்தயத்தில் அஜித், தொழிலதிபர் வீட்டில் நடிகை புகார், ஹான்சிகா மீது நாத்தனார் புகாரால் வழக்குப்பதிவு உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்

இந்த வார வெள்ளிக்கிழமை பொங்கல் ரிலீஸ் படங்களாக கேம் சேஞ்சர், வணங்கான், மெட்ராஸ்காரன் ஆகிய படங்கள் வர இருக்கின்றன. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த நாள்களில் தமிழில் மதகஜ ராஜா, காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, தருணம் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இதுதவிர கேம் சேஞ்சர் படமும் ரிலீஸாகிறது.
பொங்கலுக்கு ரிலீஸாகும் படங்களின் புரொமோஷன்கள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்
சூர்யாவின் ரெட்ரோ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் அஜித்குமார் பிறந்தநாளான மே 1 தேதி வெளியாகிறது. இதன் டைட்டில் டீஸர் கடந்த சில நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படமும் 2025இல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களில் ஒன்றாக உள்ளது.