The Goat Movie: ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்.. தி கோட் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் தல
தல தோனியும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன .
தோனி, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 68 ஆவது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்து உள்ளார்.
மேலும், லைலா, பிரபுதேவா, சினேகா, பிரசாந்த், மைக் மோகன், அஜ்மல், வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி, பார்வதி மேனன் என பெரும் நட்சத்திர பட்டாளமே கோட் படத்தில் நடித்து வருகின்றனர் .
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று இளம் கதாபாத்திரம். அதற்காக விஜய் தனது மீசையை கழற்றி சுத்தமாக ஷேவ் செய்த தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் வால்லெட் படப்பிடிப்பு முடியும் முன்பே விற்றுத் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது . அதுவும் முன்னணி ஓடிடு இயங்குதளம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஓடிடி உரிமையை இதுவரை இல்லாத தொகைக்கு வாங்கியுள்ளது.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. அந்த வகையில் கோட் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. இதற்காக கேரளா சென்ற நடிகர் விஜய்க்கு கிடைத்த வரவேற்பை பார்த்து மலையாள திரையுலகமே அதிர்ந்தது.
அங்கு முன்னணி நடிகர்களுக்கு கிடைக்காத வரவேற்பு விஜய்க்கு கிடைத்தது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கிரீன் ஃபீல்டு என்ற கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது . அங்கு கிரிக்கெட் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது .
படத்தின் ஹாட் அப்டேட்டும் வெளியாகியுள்ளது. அதன் படி, தல தோனியும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன . கிரிக்கெட் தொடர்பான காட்சி ஒன்றில் தோனியும் , விஜய்யும் இணைந்து நடிப்பதாக செய்திகள் பரவி வருவதை படக்குழுவினர் ரகசியமாக வைத்து உள்ளனர். அது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே விஜய், அழகிய தமிழ் மகன், வில்லு, கத்தி, மெர்சல், பிகில், லியோ ஆகிய படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரின் 68 ஆவது படத்திலும் இரட்டை வேடத்தில் வருவது ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் முந்தைய படமான லியோ கடந்த ஆண்டு வெளியானது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்