12 Years of Dhoni: குழந்தைகளின் திறமையை தெரிஞ்சுக்க வேண்டியதை பெற்றோரின் கடமை என உணர்த்திய படம்!
மகேஷ் மஞ்ச்ரேக்கரின் மராத்தித் திரைப்படமான Shikshanachya Aaicha Gho என்ற படத்தை அடிப்படையாகக் கொண்டு, தோனி 10 பிப்ரவரி 2012 அன்று வெளியானது. நேர்மறையான விமர்சனங்களும் வந்தன.
தோனி என்பது பிரகாஷ் ராஜ் இணைந்து எழுதி, இயக்கி, தயாரித்த 2012 இல் வெளியான திரைப்படமாகும். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டது, இதில் ஆகாஷ் மற்றும் ராதிகா ஆப்தேவுடன் பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். இந்தக் கதை ஒரு தந்தை மற்றும் அவரது மகன் இடையே நிலவும் முரண்பாடுகளை விளக்குகிறது; தந்தை தனது மகன் எம்பிஏ படிக்க வேண்டும் என்று விரும்புகிறார், ஆனால் அவரது மகன் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியைப் போல பிரபல கிரிக்கெட் வீரராக மாற விரும்புகிறார்.
மகேஷ் மஞ்ச்ரேக்கரின் மராத்தித் திரைப்படமான Shikshanachya Aaicha Gho என்ற படத்தை அடிப்படையாகக் கொண்டு, தோனி 10 பிப்ரவரி 2012 அன்று வெளியானது. நேர்மறையான விமர்சனங்களும் வந்தன.
சுப்ரமணியன் (பிரகாஷ் ராஜ்) மனைவியை இழந்த இரண்டு குழந்தைகள் உள்ள நடுத்தரக் குடும்பத் தலைவர். அவருடைய மகள் காவேரி (ஸ்ரீதேஜா) மற்றும் மகன் கார்த்திக் (ஆகாஷ்) ஆகிய இருவருக்காகவே உழைக்கிறார், வாழ்கிறார். அவர் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைத் தர விரும்புகிறார். குறிப்பாக அவர் மகனை எம்பிஏ பட்டதாரியாக உருவாக்க விரும்புகிறார்.
ஆனால், அங்கே தான் பிரச்சனை. பதினான்கு வயது சிறுவன் கார்த்திக் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக விரும்புகிறான். மகேந்திரசிங் தோனியைப் போல சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடியான பேட்ஸ்மேனாக வருவதே அவன் இலட்சியமாக இருக்கிறது.
சுப்ரமணியன் ஒரு சிறந்த பள்ளியில் மகன் கார்த்திக்கை சேர்ந்திருந்தாலும் அவன் பெரும்பாலான பாடங்களில் தோல்வி அடைகிறான். ஆனால் அவனது கிரிக்கெட் பயிற்சியாளர் (நாசர்) கார்த்திக்கின் சிறப்பான ஆட்டத்தால் ஒரு தொடரை வென்றபோது அவன் திறமையைப் புரிந்துகொள்கிறார்.
சுப்ரமணியனின் மகள் காவேரி அவர்கள் வீட்டின் அருகில் குடியிருக்கும் நளினி (ராதிகா ஆப்தே) யுடன் பழகுகிறாள். நளினி பாலியல் தொழில் செய்து சம்பாதிப்பதை அறிந்த சுப்ரமணியன் அதன் பிறகு காவேரி, நளினியுடன் பழகுவதைத் தடை செய்கிறார். கார்த்திக் சரியாக படிக்காததால் பள்ளி முதல்வர் சுப்ரமணியனை அழைத்து கார்த்திக்கைப் பள்ளியை விட்டு நீக்கப்போவதாகக் கூறுகிறார்.
தன் மகன் சரியாக படிக்காததற்கு அவன் கிரிக்கெட் விளையாடுவதே காரணம் என எண்ணும் சுப்ரமணியன் அவனது கிரிக்கெட் பயிற்சியை நிறுத்திவிட்டு பாடங்களுக்கானத் தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புகிறார். இருந்தபோதிலும் கார்த்திக்கின் படிப்பில் எந்தவித முன்னேற்றம் இல்லாததை அறிந்து சுப்ரமணியன் ஆத்திரமடைந்து அவனை அடித்ததில் அவன் தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்குச் சென்றுவிடுகிறான். தன் மகனின் இந்த நிலைக்கு தானே காரணமானதை எண்ணி மிகவும் வருந்துகிறார். மருத்துவச்செலவுகளுக்குப் பணம் தந்து உதவும் நளினியுடன் நட்பாகிறார்.
அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே படத்தின் எஞ்சிய திரைக்கதை. படிப்பு வரவில்லை என்றால் இளம் சமூகத்தினருக்கு திறமை இல்லை என்று அர்த்தம் கிடையாது. அவர்களுக்கு வேறு ஏதோ ஒன்றில் திறமை ஒளிந்திருக்கும். அதை கண்டறிவதாகவே பள்ளியும், பெற்றொரும் இருக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் படம் விவாதிக்கிறது. சமூகத்தில் நல்ல தாக்கத்தை இப்படம் ஏற்படுத்தியிருந்தது.
வழக்கம்போல் பிரகாஷ் ராஜ் நடிப்பில் பிச்சு உதறி இருப்பார். கோபம் கொள்ளும் தந்தையாக மிரட்டினாலும், பின்னால் பாசத்தால் கண் கலங்குவதாக நடிப்பில் மற்றொரு பரிமாணம் தொட்டிருப்பார் பிரகாஷ் ராஜ். இசை இளையராஜா என்பதால் படம் தனித்து தெரியும். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் தோனி. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. பார்க்காதவர்கள் இப்படத்தை கட்டாயம் பாருங்கள்!
டாபிக்ஸ்