டபுள் கேம் விளையாடும் அர்னவ்.. ஜிங் சக் போடும் தர்ஷா.. விழி பிதுங்கும் ஆண்கள் அணி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  டபுள் கேம் விளையாடும் அர்னவ்.. ஜிங் சக் போடும் தர்ஷா.. விழி பிதுங்கும் ஆண்கள் அணி

டபுள் கேம் விளையாடும் அர்னவ்.. ஜிங் சக் போடும் தர்ஷா.. விழி பிதுங்கும் ஆண்கள் அணி

Malavica Natarajan HT Tamil
Oct 16, 2024 05:26 PM IST

பெண்கள் வீட்டிலிருந்து ஆண்கள் வீட்டிற்கு வந்துள்ள, தர்ஷா வீட்டிற்குள் வந்த முதல் நாள் தொடங்கி தனது வேலையை காட்டத் தொடங்கியுள்ளார். இவரால் ஆண்கள் அணியினர் தங்களுக்குள்ளாகவே சண்டையிட ஆரம்பித்துள்ளனர்.

டபுள் கேம் விளையாடும் அர்னவ்.. ஜிங் சக் போடும் தர்ஷா.. விழி பிதுங்கும் ஆண்கள் அணி
டபுள் கேம் விளையாடும் அர்னவ்.. ஜிங் சக் போடும் தர்ஷா.. விழி பிதுங்கும் ஆண்கள் அணி

இதனால்,பவித்ரா ஆண்கள் வீட்டில் உள்ளவர்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக பல முயற்சிகளை எடுத்து அவர்களுடன் ஒருவராக மாற முயற்சி செய்தார். இது பெண்கள் அணியில் பலரையும் கோபமூட்டியது.

ஆட்டத்தை ஆரம்பித்த தர்ஷா

இந்நிலையில் தான், பெண்கள் அணி சார்பில் விளையாட தர்ஷா ஆண்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அவர் வீட்டிற்குள் சென்ற முதல் நாளில் இருந்தே அவரது வேலையை தொடங்கிவிட்டார். ஒழுங்காக டாஸ்க் விளையாடாத ஆண்களை பெண்கள் அணி முன் திட்டுவது. குழுவாக சேர்ந்து முடிவெடுக்கும் சமயத்தில் அதில் பங்கேற்காமல் பின் அதுகுறித்து கேள்வி எழுப்பி சண்டையிடுவது என தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தார்.

அர்னவ்வை கோர்த்து விட்ட தர்ஷா

இந்நிலையில், தர்ஷாவிடம் அர்னவ் பேசியதை பொதுவெளியில் கூறி ஆண்கள் அணியில் சண்டையை ஏற்படுத்தியுள்ளார் தர்ஷா. தர்ஷா ஆண்கள் வீட்டிற்கு வந்த சமயத்தில் இருந்தே அவருக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், அவருடைய உடைமைகளை எடுத்துவந்து கத்தி ஆராவாரம் செய்து வரவேற்பு அளித்தார். அப்போது, ஆண்கள் அணியினர் உனக்கு மென்டல் டார்ச்சர் கொடுப்பார்கள். உன்னிடம் பேசாமல் இருந்து கடினமான சூழலை உருவாக்கலாம் என அர்னவ், தர்ஷாவிடம் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, தான் அவர்கள் போல அல்ல நான் எப்போதும் போல உன்னிடம் பேசுபேன் எனவும் தர்ஷாவிடம் கூறியுள்ளார்.

கடுப்பான அருண்

இதை தர்ஷா ஆண்கள் அணியிடம் கூறியதால், அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அர்னவ்வின் இந்த செயலால் ஆத்திரமடைந்த அருண் அவரிடம் சண்டைக்கு செல்கிறார். தர்ஷாவிடம் நல்லவன் போல காட்டிக் கொண்டு பர்சனலாக ஸ்கோர் செய்து விளையாடுகிறீர்களா? ஆண்கள் அணியில் உள்ள அனைவரையும் கீழே தள்ளி உங்களை நல்லவராக காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறீர்களா என அருண் கோபத்துடன் கேள்வி எழுப்புகிறார்.

ஜிங் சக் போடும் தர்ஷா

இதனால், அர்னவிற்கு ஆதரவாக தர்ஷா சண்டையிடுகிறார். நான் வந்த முதல் நாளிலிருந்து அர்னவ் தனக்கு சப்போர்ட் செய்கிறார் எனக் கூற அருணிற்கு அது இன்னும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

நாங்கள் வேண்டுமென்றால் எங்களிடம் ஜிங் சக் போடுவது, அவர் வேண்டுமென்றால் அங்கு ஒரு ஜிங் சக் போடுவது என தர்ஷாவை காட்டமாக பேசியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அர்னவ், அருணிடம் பேச முற்பட்டும் அவர் அதை கேட்காமல், அர்னவ் டபுள் கேம் விளையாடுவதாக கூறுகிறார். இதனால் ஆண்கள் அணியில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

அனைத்திலும் புதிய நடவடிக்கை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 புதிய தொகுப்பாளரான விஜய் சேதுபதியின் நறுக்கென்ற பேச்சுடன் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என புதிய தொகுப்பாளர் முதல் புதிய விதிமுறைகள், புதிய வீடு என அனைத்திலும் புதிய நடவடிக்கைகளை இந்த சீசன் பிக்பாஸ் கொண்டு வந்துள்ளது. முதல் வார முடிவில் போட்டியாளர்கள் அனைவரின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்த நிலையில் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது விளையாட்டை நிரூபிக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். இதனால், பிக்பாஸ் வீடே நாளுக்கு நாள் கலவர பூமியாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.