Raayan: 'ராயன் படத்தின் கதையை நான் எழுதவில்லை' - தனுஷுக்கு எழுத்தில் உதவியதாக கூறப்பட்ட நிலையில் மறுத்த செல்வராகவன்!
2002ஆம் ஆண்டில் தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தை செல்வராகவன் இயக்கிய நிலையில், ராயன் படத்தின் ஸ்கிரிப்டின் பின்னணியிலும் அவர் இருப்பதாக ரசிகர்கள் கூறிவந்தனர். இந்நிலையில் அதை செல்வராகவன் மறுத்துள்ளார்.

நடிகர் தனுஷின் 50ஆவது படமான ‘ராயன்’ படத்திற்கு அவரது சகோதரர் செல்வராகவன் ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்துள்ளதாக சமீபத்தில் வதந்திகள் பரவின. ஆனால் அதை செல்வராகவன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
2002-ம் ஆண்டு ‘துள்ளுவதோ இளமை’ படத்தை இயக்கியவர். இருப்பினும், இந்த வதந்திகளுக்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்த செல்வராகவன், இந்தப் படம் முழுக்க முழுக்க தனுஷுடையது என்று கூறினார். சமீபத்தில் தனுஷின் 50ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிரட்டலாக வெளிவந்தது. அப்படத்திற்கு ராயன் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் பார்த்து காவியமாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறிவந்தனர்.
இந்நிலையில் படத்தின் ஸ்கிரிப்ட் வொர்க் குறித்து வதந்திகளுக்கு, இயக்குநர் செல்வராகவன் எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், 'என் தம்பியை நினைத்துப் பெருமைப் படுகிறேன்' என்றுகூறிய செல்வராகவன், "நண்பர்களே, 'டி 50 ராயன்' படத்துக்கு நான் ஸ்கிரிப்ட் எழுதியதாக செய்திகள் வந்தன. எனக்கும் 'ராயன்' கதைக்கும் திரைக்கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். இது முழுக்க முழுக்க, என் தம்பி தனுஷின் கனவுக் கதை. இப்போது அதை அவர் எழுதி இயக்கி, முக்கிய பாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நான் ஒரு நடிகன் மட்டுமே’’ என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "உங்கள் அனைவரையும் போலவே நானும் ராயன் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க வெகுநாட்கள் காத்திருக்க முடியாது. எனது சகோதரர் தனுஷின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு குறித்து நினைத்துப் பெருமைப்படுகிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
ராயன் எத்தகைய படம்?
ராயன் தனுஷின் 50ஆவது படமாகும். மேலும் 2017ஆம் ஆண்டில் பவர் பாண்டி படத்திற்குப் பிறகு, நடிகர் தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.
இப்படத்தில் ’வத்திக்குச்சி’ திரைப்படப் புகழ் திலீபன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படக்குழுவினர், படத்தின் தலைப்பை அறிவித்து சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். அதில் தனுஷ் ஒரு உணவு டிரக்கின் முன், மொட்டையடித்த தலையுடனும் மீசையுடனும் கூர்மையாகப் பார்க்கிறார்.
மேலும் அவர் இரத்தம் தோய்ந்த உடையுடன் காணப்படுகிறார். கையில் இரும்பினால் ஆன கூர்மையான பொருளை வைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
தனுஷின் அடுத்தடுத்த படங்கள் என்ன?
தனுஷ் சமீபத்தில் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து இருந்தார். அது பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட்டது. சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் இப்படம் ரிலீஸானது.
நடிகர் தனுஷ், தற்போது இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அவர் சமீபத்தில் தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்திற்கும் தனது வாழ்த்தினை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்