தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Dhanush Tweet About Lal Salaam Movie Release

Dhanush : அந்த மனசு தான் சார் கடவுள்.. பிரிந்தாலும் மனைவி, மாமனாருக்கு ஆதரவாக நிற்கும் தனுஷ்! வேற லெவல் போஸ்ட்

Aarthi Balaji HT Tamil
Feb 06, 2024 09:15 AM IST

லால் சலாம் படத்திற்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தனுஷ் - ஐஸ்வர்யா
தனுஷ் - ஐஸ்வர்யா

ட்ரெண்டிங் செய்திகள்

லால் சலாம், படத்தில் மொய் தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். லால் சலாம் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக கொண்டு அதிரடி நாடக படமாக உருவாகி உள்ளது.

லால் சலாம் படத்தில் தன்யா பாலகிருஷ்ணன், ஜீத்தா ராஜசேகர், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், அனந்திகா சனில்குமார், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார். இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.

லால் சலாம் படம் ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்குள் தயாராகாததால் பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு தயாரிப்பாளர்கள் ஒத்திவைத்தனர். இருப்பினும், அணி இன்னும் அதிக விளம்பரங்களைச் செய்யவில்லை.

சர்ச்சைக்குரிய கருத்து

சமீபத்தில் தனது தந்தை ரஜினிகாந்த் 'சங்கி' (மதச்சார்பின்மை) அல்ல என ஐஸ்வர்யா கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆன்மிக அக்கறை இருக்கும் வரை அவரை சங்கி என்று அழைக்கக் கூடாது என்பார்கள். “குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆதரிப்பவர்கள் அந்த வார்த்தையால் (சங்கி) அழைக்கப்படுகிறார்கள் என்பதை நான் அறிந்தேன்.

ரஜினிகாந்த் சங்கி அல்ல. லால் சலாம் படத்தில் நடிக்க சங்கி சம்மதித்திருக்க மாட்டார்” என்று லால் சலாம் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா கூறினார். ஆனால், ஐஸ்வர்யாவின் கருத்துக்கு சிலர் சங்கி வார்த்தையில் தவறு இருப்பதாக விமர்சித்துள்ளனர். ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். சங்கி என்பது தவறான வார்த்தை இல்லை என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை, மும்பை ஆகியப் பல இடங்களில் நடைபெற்று முடிந்தன. முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாா். இந்தப் படத்துக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை பெற்று இருக்கிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து லால் சலாம் படம், உருவாகி உள்ளது.

இந்நிலையில் லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் நேற்று ( பிப்ரவரி 5) வெளியானது. அதை ட்விட்டரில் வெளியீட்டு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்து உள்ளார். என்ன தான் பிரிந்தாலும் இதில் தங்களின் அன்பை பொழிந்து இருக்கிறார் தனுஷ்.

17 வருடங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்த தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் தங்களின் பட விழாவுக்கு இரண்டு பிள்ளைகளையும் அழைத்து செல்கிறார்கள்.

முன்னதாக தனுஷின் கேப்டன் மில்லர் படமும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படமும் ஜனவரி மாதம் ஒரே நாளில் வெளியாவதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் லால் சலாம் படத்தின் ரிலீஸ் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.