தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Dhanush To Play Ilaiyaraaja In Legendary Composer Biopic First Look Poster Here

Dhanush: ‘பண்ணைப்புர ராஜா பராக்' .. உருவெடுக்கும் இளையராஜா பயோபிக்..ஆர்மோனிய பெட்டியுடன் தனுஷ்! - ஃபர்ஸ்ட் லுக் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 20, 2024 01:36 PM IST

இளையராஜாவின் வாழ்க்கை கதை திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்தப்படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இளையராஜாவாக தனுஷ்
இளையராஜாவாக தனுஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப்படத்தை ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’, ‘கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார். இந்தப்படம் தொடர்பான துவக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், வெற்றிமாறன், இளையராஜா, தனுஷ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில்  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டு இருக்கிறார். 

முன்னதாக, நடிகர் தனுஷின் நடிப்பில், கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து அவர் இயக்கி, நடித்திருக்கும் ராயன் படம் தொடர்பான அறிவிப்பும், போஸ்டரும் வெளியானது. 

இதனிடையே நடிகர் தனுஷ் பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் வாழ்க்கை கதையில் நடிக்க இருப்பதாகவும், இந்தப்படத்தை பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான தகவல்களின் படி, அந்த படத்தில் பால்கிவிற்கு பதிலாக தமிழ் இயக்குநர் ஒருவரை கமிட் செய்யலாம் என்ற முடிவை படக்குழு எடுத்திருப்பதாக சொல்லப்பட்டது. 

அதன் படி, கிராமிய பின்னணி கொண்டவரும், தமிழ் கலாச்சாரம் பற்றி நன்கு தெரிந்த ஒருவரை இயக்குநராக கமிட் செய்யலாம் என்று படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதில் மாரிசெல்வராஜ் இயக்குநராக கமிட் ஆக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தற்போது படத்தின் இயக்குநராக அருண் மாதேஸ்வரன் கமிட் செய்யப்பட்டு இருக்கிறார்.

வருகிற அக்டோபர் மாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், 2025ம் ஆண்டு படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமா இசையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் இளையராஜா கடந்த 5 தலைமுறைகளாக இசை பயணத்தில் இருக்கிறார்.

7000 த்திற்கு மேற்பட்ட பாடல்கள், 1000த்திற்கும் மேற்பட்ட படங்கள், 20,000த்திற்கு மேற்பட்ட இசைக்கச்சேரிகள் என பெரும் சாதனை படைத்திருக்கும் அவருக்கு,கடந்த 2010ம் ஆண்டு பத்ம பூஷன் மற்றும் 2010 ம் ஆண்டு பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

இளையாராஜாவின் பயோபிக்கில் அருண்மாதேஸ்வரன் கமிட் செய்யப்பட்டு இருப்பது அனைவருக்கு ஆச்சரியம் அளிப்பதாக அமைந்து இருக்கிறது. ஆனால், இயக்குநர் அருண்மாதேஸ்வரன் மீதான நம்பிக்கையை கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் அருண் பற்றி பேசும் போது, “ அருண் மாதேஸ்வரன் எனக்கு அடிக்கடி வெற்றிமாறனை நியாபகப்படுத்தி வருகிறார். முதன்முறையாக கேப்டன் மில்லர் திரைப்படத்தின் கதையை அருண் சொன்ன போது, இவர் எப்படி இவ்வளவு பெரிய படத்தை தாங்குவார் என்ற சந்தேகம் வந்தது. அதை அவரிடமே எல்லாமே பெரிய பெரிய விஷயமாக சொல்கிறீர்கள்.. பண்ணிட முடியுமா என்று கேட்டேன். ஆனால் அவர் கூலாக பண்ணிடலாம் என்று கூறினார். படத்தை பார்த்த பின்னர்தான் அருண் சம்பவம் பண்ற கை என்று தெரிந்தது” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்