தனுஷை ஹீரோவாக்கிய துள்ளுவதோ இளமை.. சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த உன்னை நினைத்து
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தனுஷை ஹீரோவாக்கிய துள்ளுவதோ இளமை.. சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த உன்னை நினைத்து

தனுஷை ஹீரோவாக்கிய துள்ளுவதோ இளமை.. சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த உன்னை நினைத்து

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 10, 2025 11:30 PM IST

மே 10ம் தேதி முந்தைய ஆண்டுகளில் தனுஷ், சூர்யாவின் சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. தனுஷை ஹீரோவாக்கிய படம் முதல் கிளாசிக் சூப்பர் ஹிட் படம் வரை, இந்த நாளில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈரத்த படங்கள் பற்றி ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

தனுஷை ஹீரோவாக்கிய துள்ளுவதோ இளமை.. சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த உன்னை நினைத்து
தனுஷை ஹீரோவாக்கிய துள்ளுவதோ இளமை.. சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த உன்னை நினைத்து

துள்ளுவதோ இளமை

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தனுஷ் ,ஷெரின் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க டீன் ஏஜ் ட்ராமா படமாக உருவாகி 2002இல் ரிலீசான படம் துள்ளுவதே இளமை. டீன் ஏஜ் வயதில் நிகழும் காதல், தடுமாற்றம் போன்றவற்றை கொஞ்சம் கவர்ச்சியுடன் எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கும் இந்த படம் பல தடைகளை தாண்டி வெளியாகி சக்ஸஸ் படமானது.

இயக்குநர் கஸ்தூரி ராஜா என்று டைட்டில் கார்டில் பெயர் தோன்றினாலும், இந்தப் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதிய இயக்கியது செல்வராகவன் தான். பள்ளிப்படிப்பை முடித்த தனுஷ் இந்த படத்தில் தான் ஹீரோவாக அறிமுகமானார். இவரது முதல் படமே 175 நாள்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா படமானது. யுவன் ஷங்கர் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டாகி ரிப்பீட்டாக கேட்கப்பட்ட பாடலாக மாறியது.

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கும் பிறகு, சொல்லப்போனால் டீன் ஏஜ் வயது பின்னணியில் ப்ரஷ் கதையாக வெளியாகியிருந்த துள்ளுவதோ இளமை, ட்ரெண்ட் செட்டிங் படமாகவும் மாறியது.

உன்னை நினைத்து

விக்ரமன் இயக்கத்தில் சூர்யா, சிநேகா, லைலா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க காதல் கலந்த ட்ராமா பாணியில் உருவாகி 2002இல் ரிலீசான படம் உன்னை நினைத்து. வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த சூர்யாவுக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்த இந்த படம் அவரது கேரியர் கிராபையும் மாற்றியமைத்தது.

பூவே உனக்காக வெற்றிக்கு பின்னர் விக்ரமன் - விஜய் கூட்டணி மீண்டும் இந்த படத்தின் இணைந்தனர். படத்தின் சில காட்சிகளும் படமாக்கப்பட்ட நிலையில்,கருத்து வேறுபாடுகள் காரணமாக விஜய் விலகினார்.

பின்னர் சூர்யா கமிட்டாக படமும் வெளியாகி ஹிட்டாகியது. மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி சூர்யா பாராட்டுகளை பெற்றார். சிற்பி இசையில் படத்தின் பாடல்கள் அனைத்து ஹிட்டாகின. நடிகை சிநேகாவுக்கு பிலிம்பேர் விருது கிடைத்ததுடன், சிறந்த படம், சிறந்த இசை உள்பட நான்கு தமிழ்நாடு அரசின் விருதுகளையும் வென்றது.

பூவா தலையா

மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர், நாகேஷ், வரலட்சுமி உள்பட பலர் நடித்து காமெடி படமாக 1969இல் ரிலீசான படம் பூவா தலையா. அடாவடி மாமியாருக்கு எதிராக மருமகள் மற்றும் மருமகன்களுக்கு இடையே நடக்கும் ஈகோ சண்டையை வயிறு குலுங்க சிரிக்க வைக்கு காமெடி திரைக்கதையுடன் படத்தை உருவாக்கியிருப்பார்கள்.

பிளாக் அண்ட் சினிமா காலகட்டத்தில் வித்தியாசமான கதையாகவும், தமிழில் வெளியான சிறந்த கிளாசிக் காமெடி படமாகவும் பூவா தலையா இருந்து வருகிறது.