Nayantara and Vignesh Sivan: “எங்கள் காதலுக்கு ஆரம்பபுள்ளியாக இருந்தது தனுஷ் தான்”! பிளேஷ்பேக்கை பகிர்ந்த காதல் ஜோடிகள்
எங்கள் காதலுக்கு ஆரம்பபுள்ளியாக இருந்தது தனுஷ் தான் என்று பேட்டி ஒன்றில் ஸ்டார் ஜோடிகளான விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோர் வெளிப்படுத்தியுள்ளனர். நானும் ரெளடி தான் படத்தின் போது நடந்த சம்பவம் பற்றியும் விக்னேஷ் சிவன் நினைவு கூர்ந்துள்ளார்.

கோலிவுட்டின் ஸ்டார் தம்பதிகளாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோர் இருந்து வருகிறார்கள். 2015ஆம் ஆண்டில் நானும் ரெளடி தான் படப்பிடிப்பில் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், டேட்டிங், காதலுக்கு பிறகு தம்பதிகள் ஆகியுள்ளனர். திருமணத்துக்கு பின்னரும் நயன்தாரா பிஸியான நடிகையாக வலம் வருகிறார். அதேபோல் விக்னேஷ் சிவனும், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதலுக்கு நடிகர் தனுஷ் தான் ஆரம்பபுள்ளியாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது. நானும் ரெளடி தான் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், நயன்தாராவிடம் கதை கூறுமாறு விக்னேஷ் சிவனிடம் தெரிவித்துள்ளாராம். அப்போது தான் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இடையே அறிமுகம் ஏற்பட்டு, நட்பாகி, காதலாக மலர்ந்தது.
தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறிய வேடத்தில் விக்னேஷ் சிவன் நடித்திருப்பார். இதனால் ஏற்பட்ட பழக்கத்தால் விக்னேஷ் சிவனுக்கு படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார் தனுஷ். அதன் பின்னர் நடந்த சம்பவம் குறித்து காதல் ஜோடிகளான விக்னேஷ் சிவன் - நயன்தாரா பேட்டி ஒன்றில் விவரித்தனர்.
அப்போது விக்னேஷ் சிவன் கூறியதாவது, "நானும் ரெளடி தான் பட கதையை நயன்தாராவிடம் கூறுமாறு தனுஷ் சார் என்னிடம் கூறினார். அவருக்கு கதை பிடித்துபோக, நடிக்க ஒப்புக்கொண்ட பின்னர் விஜய் சேதுபதியை சமாதானப்படுத்த முடிந்தது. ஏனென்றால் அவர் முதலில் இந்த படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு அவரும் இதில் நடிக்க சம்மதித்தார்.
நானும் ரெளடி தான் படத்தினால் தான் நயன்தாராவிடம் அதிக நேரம் செலவழிக்க நேரிட்டது. அப்புறம் ஓராண்டுக்கு பிறகு நாங்கள் டேட்டிங் செய்ய தொடங்கினோம்." என்றார்.
இதன் மூலம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா சந்திப்புக்கு காரணமாக இருந்தவரும், அவர்கள் காதலுக்கு தொடக்கபுள்ளியாகவும் இருந்தவரும் தனுஷ் என்பது தெரிகிறது.
அத்துடன் ஆரம்பகட்டத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோருக்கு தங்களது உறவு ஒர்க் அவுட் ஆகுமா என்கிற சந்தேகம் இருந்துள்ளது. ஆனால் மூன்று மாதம் பழக்கத்துக்கு பிறகு அவர்கள் பழக்கத்தை தொடர்ந்துள்ளனர். அத்துடன் காதலில் இருப்பது பற்றி அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தவும் இல்லை.
ஆறு வருட ரிலேஷன்சிப்
நானும் ரெளடி தான் படத்தின் போது தொடங்கிய இவர்களின் உறவுப் பயணம் ஆறு ஆண்டுகள் வரை தொடர்ந்தது. பின்னர் 2021இல் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.
2022, ஜூன் 9ஆம் தேதி சென்னஐ மகாபலிபுரத்தில் இவர்களின் திருமணம் குடும்பு உறுப்பினர்கள், நெருக்கமானவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உள்பட பலரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள்.
அக்டோபர் 2022இல் இந்த தம்பதியினர் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததாக தெரிவித்தார்கள்.
விவாகரத்து வதந்தி
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோர் விவாகரத்து செய்ய போவதாக தகவல்கள் வெளியாகின. இன்ஸ்டாவில் விக்னேஷ் சிவனை, நயன்தாரா அன்பாலோ செய்ததால் இவ்வாறு கூறப்பட்ட நிலையில், அது வதந்தி தான் எனவும், இன்ஸ்டா சம்பவம் தொழில்நுட்ப பிரச்னையால் நிகழ்ந்தது எனவும் கூறப்பட்டது.
மறுபடியும் நயன்தாரா, இன்ஸ்டாவில் விக்னேஷ் சிவன் பாலோ செய்ய தொடங்கினார். அத்துடன் விவகாரத்து குறித்த தகவலுக்கு பதில் அளிக்கும் விதமாக கணவர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்ற நயன்தாரா ரொமாண்டிக்கான புகைப்படங்களை பகிர்ந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்