பாலிவுட் படம் பினிஷ்..பார்டி மோடில் தனுஷ்..! உடன் இருக்கும் ஹீரோயின்கள் யாரெல்லாம் பாருங்க
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பாலிவுட் படம் பினிஷ்..பார்டி மோடில் தனுஷ்..! உடன் இருக்கும் ஹீரோயின்கள் யாரெல்லாம் பாருங்க

பாலிவுட் படம் பினிஷ்..பார்டி மோடில் தனுஷ்..! உடன் இருக்கும் ஹீரோயின்கள் யாரெல்லாம் பாருங்க

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jul 04, 2025 12:00 PM IST

தனுஷ் சில நாட்களுக்கு முன்பு மும்பையில் க்ரித்தி சனோனுடன் ஆனந்த் எல் ராய் தேரே இஷ்க் மே படப்பிடிப்பை முடித்தார். இதன் பின்னர் படக்குழுவினருடன் இணைந்து பார்டியில் பங்கேற்றார்.

பாலிவுட் படம் பினிஷ்..பார்டி மோடில் தனுஷ்..! உடன் இருக்கும் ஹீரோயின்கள் யாரெல்லாம் பாருங்க
பாலிவுட் படம் பினிஷ்..பார்டி மோடில் தனுஷ்..! உடன் இருக்கும் ஹீரோயின்கள் யாரெல்லாம் பாருங்க

மிருணால், தமன்னாவுடன் பார்ட்டியில் தனுஷ்

மிருணால், தமன்னா, பூமி, கிருதி மற்றும் ஆனந்த் ஆகியோருடன் தனுஷ் பார்ட்டியில் இருக்கும் புகைப்படங்களை பாலிவுட் சினிமாவின் எழுத்தாளர்-தயாரிப்பாளர் கனிகா தில்லான் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். தனது பதிவில், "எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன! எங்கள் வீட்டில் எங்களது OG ராஞ்சனா தனுஷ், நாங்கள் உங்களை நேசிக்கிறோம்! பழைய மற்றும் புதிய நண்பர்களுடன், பெரிய புன்னகைகள், பெரிய இதயங்கள்! நினைவுகளுக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

தேரே இஷ்க் மெய்ன் படம்

கடந்த 2023 ஜூன் மாதம், ராஞ்சனாவுக்குப் பிறகு மீண்டும் தனுஷுடன் இணைவதாக இயக்குர் ஆனந்த் எல் ராய் அறிவித்தார். இந்த படத்தில் தனுஷின் லுக் ஆனந்தை போலவே நீண்ட தலைமுடியுடன் அமைந்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில், படத்தின் கிருதியின் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. படம் பற்றி பிடிஐ நிறுவனத்திடம் பேசிய ஆனந்த், "இது ராஞ்சனாவின் உலகத்திலிருந்து வந்தது, ஆனால் அது ராஞ்சனா 2 இல்லை. ராஞ்சனாவின் உலகம் என்று நான் சொல்லும்போது, ​​தயாரிப்பாளரின் பார்வையில் இருந்து பேசுகிறேன், ராஞ்சனாவில் இருந்த உணர்ச்சிகரமான விஷயங்கள் இந்த படத்திலும் இருக்கும்" என்றார்

வரவேற்பை பெற்ற குபேரா

தனுஷ் நடித்து, சேகர் கம்முலா இயக்கத்தில் சமீபத்தில் சமீபத்தில் வெளியான குபேரா ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்றது. தெலுங்கு படமான குபேரா தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக ரிலீசானது. படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தமிழை விட தெலுங்கில் சிறப்பாக உள்ளது. மேலும், படத்துக்கு நேர்மறையான விமர்சனங்களும் வெளியாகியுள்ளன. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் இட்லி கடை என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் அவர் முக்கிய கதாாத்திரத்திலும் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

ராஞ்சனா, ஷமிதாப், அத்ரங்கி ரே ஆகிய படங்களுக்கு பிறகு தனுஷ் நடிக்கும் நேரடி இந்தி படமாக தேரே இஸ்க் மெயின் படம் உருவாகி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.