தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Dhanush Nagarjuna Sekhar Kammula Dns Launched With Grand Pooja Ceremony Regular Shoot Begins

Dhanush: இறுக்கும் போட்டி..ரெஸ்ட் இல்லாமல் ஓடும் தனுஷ்.. தனுஷ் 51 வது பட பூஜை தொடக்கம்! - யார் இயக்குநர்?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 18, 2024 12:51 PM IST

தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா இணையும் DNS படத்தின் படப்பிடிப்பு பிரமாண்ட பூஜை விழாவுடன் தொடங்கப்பட்டது.

தனுஷ்
தனுஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தத்திரை படத்தின் பூஜை விழா இன்று நடந்தது. இந்த பூஜை விழாவில் சுனில் நரங், புஸ்குர் ராம் மோகன் ராவ், பாரத் நரங், ஜான்வி நரங் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக சில முக்கியமான காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளன.

தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படமும், நாகர்ஜூனாவின் நடிப்பில் வெளியான நா சாமி ரங்கா திரைப்படமும் மக்களிடம் வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில், இந்தப்படம் மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, ராமகிருஷ்ணா சப்பானி மற்றும் மோனிகா நிகோத்ரே ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பைக் கவனிக்கின்றனர்.

சர்வதேச சண்டைப் பயிற்சி இயக்குநரான யானிக் பென், ஆக்‌ஷன் பகுதியை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி (ஏசியன் குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனம் சார்பில், அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து, சோனாலி நரங் வழங்க பிரமாண்டமாக இந்தப்படம் தயாரிக்கப்படுகிறது. முன்னதாக தனுஷ் தன்னுடைய 50 வது திரைப்படத்தை தானே எழுதி நடித்திருக்கிறார். இந்தப்படத்தை தொடர்ந்து இன்னொரு படத்தின் டைரக்‌ஷன் பணியை தொடங்கி இருக்கும் அவர், தற்போது இந்தப்படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். 

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.