‘எவ்வளவு நெகட்டிவிட்டி.. சர்க்கஸ் எல்லாம் இங்க வேண்டாம்.. ஒரு செங்கல கூட ஆட்ட முடியாது’ - கொந்தளித்த தனு
என்னுடைய திரைப்படம் வெளியாவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் ஏதாவது ஒரு நெகட்டிவிட்டியை கையிலெடுத்து பரப்புகிறீர்கள். - தனுஷ் பேச்சு!

‘எவ்வளவு நெகட்டிவிட்டி.. சர்க்கஸ் எல்லாம் இங்க வேண்டாம்.. ஒரு செங்கல கூட ஆட்ட முடியாது’ - கொந்தளித்த தனுஷ்!
தனுஷ் நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் வருகிற ஜூன் 20 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் குபேரா. ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் தன்னை வைத்து பரப்பப்படும் நெகட்டிவிட்டிக்கு பதிலடி கொடுத்தார்.
எவ்வளவு நெகட்டிவிட்டி
இது குறித்து அவர் பேசும் போது, ‘நீங்கள் என்னைப் பற்றி எவ்வளவு வதந்திகளை வேண்டுமென்றாலும் பரப்புங்கள். எப்படிப்பட்ட நெகட்டிவிட்டியை வேண்டுமென்றாலும் பரப்புங்கள். என்னுடைய திரைப்படம் வெளியாவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் ஏதாவது ஒரு நெகட்டிவிட்டியை கையிலெடுத்து பரப்புகிறீர்கள்.