Idly Kadai Movie: அஜித்தால் தள்ளிப் போகிறதா இட்லி கடை ரிலீஸ்? பரபரப்பாகும் சோசியல் மீடியா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Idly Kadai Movie: அஜித்தால் தள்ளிப் போகிறதா இட்லி கடை ரிலீஸ்? பரபரப்பாகும் சோசியல் மீடியா!

Idly Kadai Movie: அஜித்தால் தள்ளிப் போகிறதா இட்லி கடை ரிலீஸ்? பரபரப்பாகும் சோசியல் மீடியா!

Malavica Natarajan HT Tamil
Published Mar 01, 2025 01:59 PM IST

Idly Kadai Movie: அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டீசரை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், தனுஷின் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தள்ளப் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Idly Kadai Movie: அஜித்தால் தள்ளிப் போகிறதா இட்லி கடை ரிலீஸ்? பரபரப்பாகும் சோசியல் மீடியா!
Idly Kadai Movie: அஜித்தால் தள்ளிப் போகிறதா இட்லி கடை ரிலீஸ்? பரபரப்பாகும் சோசியல் மீடியா!

வைப் உச்சத்தில் அஜித் ரசிகர்கள்

இந்நிலையில், நேற்று பிப்ரவரி 28ம் தேதி குட் பேட் அக்லி படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை பயங்கரமாக குஷிபடுத்தியது. இந்தப் படத்தின் வசனங்களும், அஜித்தின் லுக்கும் பல அஜித் படங்களின் ரெஃபரன்சும் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

ட்ரெண்டிங்கில் இட்லி கடை

இதன் காரணமாக டீசர் வெளியான நிமிடத்தில் இருந்து ட்ரெண்டிங்கில் அஜித் குமார், ஆதிக் ரவிச்சந்திரன், ஜி.வி பிரகாஷ், குட் பேட் அக்லி டீசர் இடம் பிடித்துள்ளது. அத்தோடு, இத்தனை மாஸாக அஜித் படம் உருவாகி வருவதால், தனுஷின் இட்லி கடை ரிலீஸும் தள்ளப் போகலாம் எனக் கூறி ஒரு கூட்டம் இட்லி கடை படத்தையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தள்ளிப்போகிறதா இட்லி கடை ரிலீஸ்?

இந்நிலையில், சிலர் இட்லி கடை படத்தின் ரிலீஸ் நிச்சயம் தள்ளிப் போகும். இது அஜித்தின் ஃபேன் பாய் சம்பவம். டீசரே மிரட்டினால் படம் எப்படி இருக்கும் எனக் கூறி மேலும் படத்திற்கு வைப் ஏற்றி வருகின்றனர். இதை எல்லாம் பார்த்து இட்லி கடை படக்குழுவே ரிலீஸை தள்ளி வைக்க வாய்ப்புள்ளதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.

தனுஷுக்கு அழுத்தம்

குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் அறிவிப்பால், ஏற்கனவே இட்லி கடை படத்தின் ரிலீஸ் கேள்விக்குறியாக உள்ளது என முன்னதாக வலைபேச்சு குழு தெரிவித்த நிலையில், இப்போது ரசிகர்களின் இந்தக் கருத்துக்களும் அப்படத்திற்கும் தனுஷிற்கும் பெரிய அழுத்தத்தை தந்துள்ளதாகத் தெரிகிறது.

சோசியல் மீடியா வதந்திகள்

மேலும், இட்லி கடை படத்தை டிஸ்டிபியூட்டர்ஸ் எல்லாம் பெரிய தொகை கொடுத்து வாங்க முன்வரவில்லை. குட் பேட் அக்லி படம் வரும் போது, இந்தப் படத்தை பெரிய தொகைக்கு வாங்கினால், தியேட்டரில் ஸ்கிரீன் கிடைக்காமல் பெரிய நஷ்டம் ஏற்படும் என யோசிக்கிறார்கள் என்றும் சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இட்லி கடை

தனுஷின் 50வது படமான ராயனை இயக்கி நடித்த பின் அவர் அடுத்ததாக இந்தப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் படத்தில் தனுஷ், நித்யா மேனனுடன் அருண் விஜய், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இட்லி கடை படத்தில் மனதை வருடும் பல கிராமிய பாடல்கள் இடம்பெற்றிருப்பதாக ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.