தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Dhanush Film Shoot Halts Due To Heavy Traffic In Tirupathi

Dhanush: வெடித்தது சர்ச்சை..பாதியில் நின்ற தனுஷின் D51 படப்பிடிப்பு - திருப்பதியில் நடந்தது என்ன?

Karthikeyan S HT Tamil
Jan 30, 2024 09:38 PM IST

தனுஷின் 51வது படத்தை தெலுங்கு திரைப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார்.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸான 'கேப்டன் மில்லர்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக வெளியான 'கேப்டன் மில்லர்' ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்ற கருத்து ஒருபக்கம் இருந்தாலும் வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நடிகர் தனுஷ் தனது 51வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா மூவியாக உருவாகி வருகிறது தனுஷின் D51. தெலுங்கில் பிரபல இயக்குநரான சேகர் கமுலா இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

'தனுஷ் D51' எனத் தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் நாகர்ஜூனா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜன.30) காலை திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் தொடங்கி நடைபெற்று வந்தது. படப்பிடிப்புக்கு எந்த தடையும் ஏற்படக் கூடாது என்பதால் திருப்பதி மலைக்கு சென்று கொண்டிருந்த பேருந்துகள் மற்றும் பக்தர்களின் வாகனங்களை மாற்று சாலை வழியாக போலீஸார் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. 

போக்குவரத்து நெரிசலை அடுத்து பக்தர்களும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து தனுஷ் படத்தின் படப்பிடிப்பிற்கு அனுமதி தரக்கூடாது என பாஜகவினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து திருப்பதியில் தனுஷ் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தனுஷ் படப்பிடிப்பால் காலை முதல் தொடர் பிரச்னை ஏற்பட்டதால் படப்பிடிப்புக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரமேஸ்வர ரெட்டி தெரிவித்துள்ளார். போக்குவரத்து இடையூறு, பக்தர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு படப்பிடிப்புக்கான அனுமதியை ரத்து செய்வதாகவும் அவர் கூறியுள்ளாா்.

திருப்பதியை தொடர்ந்து மும்பையில் D51 படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அங்கு தனுஷ், ராஷ்மிகா மந்தனா இருவரும் நடிக்கும் காட்சிகளை படமாக்க இயக்குநர் சேகர் கம்முலா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் D51 படப்பிடிப்பு முடிவுக்கு வரும் எனவும் இந்தாண்டு இறுதிக்குள் படம் ரிலீஸாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.