Dhanush: 'தனுஷ் கடவுளோட குழந்தை.. அவரத் தேடி தான் வாய்ப்பு வருது'- பெருமை கொண்ட கஸ்தூரி ராஜா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhanush: 'தனுஷ் கடவுளோட குழந்தை.. அவரத் தேடி தான் வாய்ப்பு வருது'- பெருமை கொண்ட கஸ்தூரி ராஜா

Dhanush: 'தனுஷ் கடவுளோட குழந்தை.. அவரத் தேடி தான் வாய்ப்பு வருது'- பெருமை கொண்ட கஸ்தூரி ராஜா

Malavica Natarajan HT Tamil
Feb 02, 2025 12:42 PM IST

Dhanush: தனுஷ் கடவுளின் குழந்தை. அவர் எங்கும் வாய்ப்பு தேடி போனதில்லை. பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் வாய்ப்பு தேடி வந்தது என தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா சில மாதத்திற்கு முன் அளித்த பேட்டியில் பெருமையாக பேசியுள்ளார்.

Dhanush: 'தனுஷ் கடவுளோட குழந்தை.. அவரத் தேடி தான் வாய்ப்பு வருது'- பெருமை கொண்ட கஸ்தூரி ராஜா
Dhanush: 'தனுஷ் கடவுளோட குழந்தை.. அவரத் தேடி தான் வாய்ப்பு வருது'- பெருமை கொண்ட கஸ்தூரி ராஜா

பிஸியான தனுஷ்

இவர் இயக்கிய திரைப்படங்களும், நடித்த திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸிற்கு தயாராக இருக்க, அடுத்தடுத்து முக்கிய இயக்குநர்களுடனும் கைகோர்த்துள்ளார். இந்த சமயத்தில், தனுஷ் குறித்து சில மாதங்களுக்கு முன் அவரது தந்தை கஸ்தூரி ராஜா பேசிய வார்த்தைகள் தான் தற்போது வைரலாகி வருகிறது.

கஸ்தூரி ராஜா, டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் சினிமா பிரபலமான சித்ரா லக்ட்சுமணனுக்கு பேட்டி அளித்திருப்பார். அந்தப் பேட்டியில், தனுஷை அவர் கடவுளின் குழந்தை என பாராட்டி இருப்பார்.

எனக்கு முன்ன கடவுள் போறாரு

தொடர்ந்து சித்ரா லட்சுமணனுடன் பேசிய கஸ்தூரி ராஜா, " நான் என் திரைப் பயணத்தை சங்கராபுரம்ங்குற என் மனைவி ஊர்ல இருந்து தான் ஆரம்பிச்சேன். நான் சினிமாவுல வர்றதுக்காக கஷ்டப்படவே இல்ல. எனக்கு முன்னாடி கடவுள் போயிட்டே இருக்காரு. அவரு தான் என்ன பெரிய பெரிய டைரக்டர் கண்ணுல காட்டி, கடைசியில விசு சார்கிட்ட போட்டுட்டாரு. இதுல என் கஷ்டம் எதுவும் இல்ல.

அதுக்கு அப்புறம் நான் டைரக்டரா ஆனதுக்கு அப்புறம் கூட, ஒரு 50 வயசு ஆளு என்கிட்ட சான்ஸ் கேட்டு வந்தாரு. அவரு இப்போவும் சான்ஸ் தான் கேட்டுட்டு இருக்காரு. கடவுள் என்ன அந்த மாதிரி விட்டுடல. அதே மாதிரி தான் தனுஷ்க்கும்.

தனுஷ் கடவுளோட குழந்தை

தனுஷ் எதையுமே அவர் தேர்ந்தெடுக்குறது இல்ல. எல்லாமே அவர தேடி தான் வந்தது. ஹிந்தி படமும், ஆங்கில படமும் அவரத் தேடி தான் வந்தது. இதை நான் மமதையில சொல்லல. இது கடவுள் போட்ட பாதை. தனுஷ் கடவுளோட குழந்தை.

ஆனா, அவன் சொல்றான் எல்லா இடத்துலயும், இது அம்மா அப்பா போட்ட ஆசிர்வாதம் தான்னு. ஒருவேள அப்படி இருந்தா எனக்கும் எங்க அம்மா அப்பா போட்ட ஆசிர்வாதம் தான். கடின உழைப்பும், காலம் தவறாமையும் தான் தனுஷ் வெற்றிக்கு காரணம் என அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பார்.

கஸ்தூரி ராஜா

கஸ்தூரி ராஜா, தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டும் இல்லாமல், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல அடையாளங்களை தன்னுள் வைத்துள்ளார்.

1980களில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த இவர், 1991ம் ஆண்டு ராஜ்கிரணை வைத்து இயக்கிய என் ராசாவின் மனசிலே எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தற்போது தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் படத்தை தயாரித்தும் உள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் ஹிட் அடித்ததுடன், மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்று அசத்தி வருகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.