Raayan : வழக்கம் போல் ரகளை.. தனுஷின் ராயன் இசை நிகழ்ச்சியில் மோதி கொண்ட ரசிகர்கள்!
Raayan: தனுஷின் ராயன் இசை நிகழ்ச்சி விமர்சியாக நடந்து கொண்டு இருக்க தனுஷ் ரசிகர்கள் அரங்கத்திற்குள் சண்டை போட்டு கொண்டு இருந்து இருக்கிறார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ராயன் படத்தின் இசை வெளியீடு நேற்று ( ஜூலை 6 ) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்தின் நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
ராயன் இசை வெளியீட்டு விழா அரங்கத்தின் உள்ளே நடிகர் தனுஷ், வெள்ளை வேஷ்டி.. வெள்ளை சட்டையில் மாஸாக நுழைந்தார். அவர் அரங்கத்திற்குள் நுழையும் போது அதிகபட்சமாக 111 டெசிபிள் சத்தம் கேட்டதாக ரசிகர் ஒருவர் ரெக்கார்டு செய்து உள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் பதிவிட்டு உள்ளார்.
சண்டையில் ஈடுபட்ட ரசிகர்கள்
ஒரு பக்கம் விழா விமர்சியாக நடந்து கொண்டு இருக்க தனுஷ் ரசிகர்கள் அரங்கத்திற்குள் சண்டை போட்டு கொண்டு இருந்து இருக்கிறார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இது போன்ற செயல்களில் தனுஷ் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
நடிகர் தனுஷ் தனது இரண்டாவது இயக்கத்தில் எழுதி, இயக்கிய வரவிருக்கும் தமிழ் மொழி அதிரடி திரில்லர் திரைப்படம், ராயன். இந்த படத்தில் சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து உள்ளார். இதில் தனுஷ் லீடு ரோலில் நடித்து இருக்கிறார்.
ராயன் நடிகர்கள்
இதில் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சுந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படம் ராயன் என்ற இளைஞனைப் பின் தொடர்கிறது. அவர் தனது குடும்பத்தின் கொலைகாரர்களைத் தேடும் வகையான கதை களத்தை கொண்டு இருக்கிறது.
ஏ. ஆர். ரஹ்மான் இசை
இப்படம் ஜனவரி 2023 ஆம் ஆண்டு D 50 என்ற தற்காலிகத் தலைப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, இது தனுஷின் 50 ஆவது படமாகும், மேலும் அதிகாரப்பூர்வ தலைப்பு பிப்ரவரி 2024 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது முக்கியமாக சென்னை மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு மற்றும் பிரசன்னா ஜி. கே படத்தொகுப்பு செய்து உள்ளார்.
ராயன் படம்
தனுஷின் ராயன் படம், 13 ஆம் தேதி ஜூன் மாதம் 2024 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் அறியப்படாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது தனுஷின் பிறந்தநாளான ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்