இந்த வருஷமும் நாங்க தான்டா! இட்லி கடை போஸ்டரை வெளியிட்ட தனுஷ்! அப்போ இனி அதகளம் தான்!
தனுஷின் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படமான ராயன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதிலும் வசூல் ரீதியாக மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து அவரது இயக்கத்தில் மற்ற படங்கள் குறித்து அறிவிப்பும் வெளியாக தொடங்கின.
உலகம் முழுவதும் 2025 ஆம் ஆண்டு பிறந்து அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். பொதுமக்களுக்கு கொண்டாட்டம் என்றால் அதில் நிச்சயமாக சினிமாவும் இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் பல புதிய படங்கள் இந்த சமயத்தில் வெளியாகி உள்ளன. 2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் சிறந்த ஆண்டு எனவே கூறலாம். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் சிறந்த படங்கள் வெளியாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
இருப்பினும் இந்த 2024 ஆம் ஆண்டில் சில படங்கள் தடுமாறியதும் உண்மையே. குறிப்பாக சில முக்கிய சினிமா பிரபலங்கள் விவாகரத்து பெற்றதும் இந்த 2024 ஆம் ஆண்டாகவே இருந்தது. அந்த வரிசையில் திரைத்துறையில் ராயன் படத்தின் மூலம் பெரும் வெற்றியை அடைந்திருந்தாலும், தனுஷிற்கு விவாகரத்து கிடைத்தது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னதாக பிரிவதாக அறிவித்திருந்த இருவரும் சேர்வதற்காக அவர்களது குடும்பத்தினர் பேசி வந்த நிலையில் விவாகரத்தில் இருவரும் உறுதியாக இருந்தது ரசிகர்கள் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திரைத்துரையில் வெற்றி
சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் இருந்தாலும், தனுஷின் திரை வாழ்க்கை சிறப்பாக இருந்தது. அவரின் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படமான ராயன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதிலும் வசூல் ரீதியாக மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து அவரது இயக்கத்தில் மற்ற படங்கள் குறித்து அறிவிப்பும் வெளியாக தொடங்கின.
முன்னதாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வந்த தனுஷ் அப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்து அடுத்த படத்திற்கு தயாராவதாக அறிவிப்பு வந்தது. இதனை உறுதி செய்த தனுஷ் இட்லி கடை படம் குறித்தான அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தேனியில் சுற்றுவட்டார பகுதியில் இந்த படத்தின் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன் மற்றும் ராஜ்கிரன் ஆகியோர் நடித்து வந்தனர். இந்த நிலையில் திடீரென தனுஷின் உடல்நிலை மோசமானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் தற்போது இப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாக உள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு கெத்து காட்டி இருக்கிறார் தனுஷ்.
2024 ஆம் ஆண்டு போலவே 2025 ஆம் ஆண்டும் தனுஷிற்கு சிறந்த ஆண்டாக அமையப் போகிறது. ஒரு நடிகராக மட்டும் அல்லாமல் இயக்குனர் தனுசாக மீண்டு தடம் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 10 தேதி வெளியாக உள்ளதாக பட குழு அறிவித்துள்ளது.
கிராம பின்னணி கொண்ட கதை
தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் கிராமத்து பின்னணி கொண்டதாக வெளியாகியுள்ளது. தற்போது அவரது முதல் படத்தின் ஹீரோவான ராஜ்கிரனும் இப்படத்தில் நடித்து இருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்துள்ள குபேரா படமும் இந்த ஆண்டில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்