தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Dhanush Caption Miller Movie Public Review

Caption Miller Public Review: ஒரே குண்டு சத்தம்.. தூங்கிட்டோம்..கேப்டன் மில்லர் பார்த்து புலம்பும் ரசிகர்கள்

Aarthi Balaji HT Tamil
Jan 12, 2024 12:29 PM IST

கேப்டன் மில்லர் படம் தொடர்பாக ரசிகர்கள் கூறிய விமர்சனத்தை பார்க்கலாம்.

கேப்டன் மில்லர் விமர்சனம்
கேப்டன் மில்லர் விமர்சனம்

ட்ரெண்டிங் செய்திகள்

படத்தின் நீளம் மற்றும் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் மில்லர் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தில் இடம்பிடித்திருக்கும் சில வன்முறை காட்சிகளுக்கு கத்திர போட்டுள்ளனர். இந்த படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 4 நிமிட காட்சிகள் வரை நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் நீளம் 2 மணி 37 மணி நிமிடங்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் வெள்ளையர்களுக்கு எதிராக கிராம மக்கள் காக்கும் ஹீரோவாக படத்தில் தனுஷ் தோன்றினார்.

படத்தில் கன்னட நடிகர் ஷிவ்ராஜ்குமார், சந்தீப் கிஷான், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், நாசர் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்தார்.

கேப்டன் மில்லர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் படக்குழு 32 நாட்கள் படமாக்கி உள்ளார்கள். அருண் மாதேஸ்வரனின் தனது ராக்கி படம் முழுவதுமே 37 நாட்களில், முழுவதுமாக படமாக்கப்பட்டது.

தனுஷ் கடைசியாக தமிழ், தெலுங்கு என இருமொழி படமான வாத்தியில் நடித்திருந்தார். கேப்டன் மில்லரைத் தவிர, சேகர் கமுலா இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் தற்காலிகமாக பெயரிடப்பட்ட டி 51, பாலிவுட் படமான தேரே இஷ்க் மே, ராஞ்சனா மற்றும் அத்ரங்கி ரே ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆனந்த் எல் ராயுடன் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.