Captain Miller Box office: 100 கோடி வசூல் செய்திருக்கிறதா கேப்டன் மில்லர்? - டேட்டாவை அடுக்கிய ட்ரேடர்!
படம் தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. பான் இந்தியா படமாக உருவாகியிருந்தாலும், கேப்டன் மில்லர் தெலுங்கில் வெளியாகவில்லை.
தனுஷ் நடிப்பில் பீரியட் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் கேப்டன் மில்லர் பொங்கல் ரிலீஸாக ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. அருண் மாதேஷ்வரன் இயக்கி இருந்த இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.
படம் தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. பான் இந்தியா படமாக உருவாகியிருந்தாலும், கேப்டன் மில்லர் தெலுங்கில் வெளியாகவில்லை.
சங்கராந்தியை முன்னிட்டு ஹனுமன், குண்டூர் காரம், சைந்தவ், நா சாமி ராக என தெலுங்கில் நான்கு படங்கள் வெளியான காரணத்தால், பிற மொழி படங்களை ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு நிலவிய நிலையில், கேப்டன் மில்லர் தெலுங்கு பதிப்பு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையே தமிழ் உள்பட ரிலீசான பிற மொழிகளில் கேப்டன் மில்லர் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த படம் 100 கோடி வசூல் செய்துள்ளதாக பிரபல ட்ரேடரான மனோபாலா கலெக்ஷன் விவரங்களுடன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவு இங்கே!
நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே தன்னுடைய 50 வது திரைப்படத்தை தானே எழுதி நடித்து முடித்திருக்கும் தனுஷ், தான் டைரக்ஷன் செய்யும் படத்தின் பணியையும் தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் - நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் படத்தின் பூஜையும் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
இந்தப்படத்தை தெலுங்கில் ஃபிடா மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய திரைப்படங்களை எடுத்த தேசிய விருது பெற்ற இயக்குநர் சேகர் கம்முலாவால் இயக்குகிறார். இந்தத்திரைப்படத்தின் பூஜை விழா அண்மையில் நடைபெற்றது.
இந்த பூஜை விழாவில் சுனில் நரங், புஸ்குர் ராம் மோகன் ராவ், பாரத் நரங், ஜான்வி நரங் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக சில முக்கியமான காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளன.
தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, ராமகிருஷ்ணா சப்பானி மற்றும் மோனிகா நிகோத்ரே ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பைக் கவனிக்கின்றனர்.
சர்வதேச சண்டைப் பயிற்சி இயக்குநரான யானிக் பென், ஆக்ஷன் பகுதியை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி (ஏசியன் குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனம் சார்பில், அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து, சோனாலி நரங் வழங்க பிரமாண்டமாக இந்தப்படம் தயாரிக்கப்படுகிறது.
டாபிக்ஸ்